காதல் திருமணம் முடித்த கையோடு தாய்லாந்திற்கு தேனிலவு சென்றுள்ள விக்கி-நயன் ஜோடி.
நானும் ரவுடிதான் படத்தின் போது விக்னேஷ் சிவனுக்கும் – நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. 8 ஆண்டுகளாக இருவரும் கியூட்டான காதல் ஜோடிகளாகவே வலம் வந்து கொண்டிருந்த நிலையில் கடந்த ஜுன் 9ம் தேதி இருவருக்கும் கோலகலமாக திருமணம் நடைபெற்றது. ரஜினிகாந்த், ஷாருக்கான், மணிரத்னம், விஜய்சேதுபதி, அட்லி உள்ளிட்ட பல்வேறு சினிமா நட்சத்திரங்களும் இத்திருமணத்தில் கலந்து கொண்டர்.
திருமணத்தை படம் பிடிக்கும் உரிமையை பிரபல ஓ.டி.டி தளமான நெட்ஃபிலிக்ஸ் வாங்கியதால் நிகழ்ச்சிகள் புகைப்படம் எடுக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நயன்தாராவுக்கு மேக்கப் போட்டவர்கள், கல்யாணத்தில் மந்திரம் ஓதியவர்கள், திருமணத்தை நேரில் பார்த்தவர்கள் உள்ளிட்ட அனைவரையும் மடக்கி பிடித்து பேட்டியெடுத்து அது செய்தியாக்கப்பட்டது. இந்நிலையில் விக்னேஷ் சிவன் ட்விட்டரில் வெளியிட்ட திருமணம் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது.
இந்த திருமணத்திற்கு பலரும் தங்களின் அன்பையும், நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டிருக்க, சிலரோ வழக்கம் போல வன்மங்களை வெளிப்படுத்த முயற்சி செய்து கொண்டிருந்தனர். திருமணம் முடிந்த கையோடு விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் கோவில் கோவிலாக சென்று சாமி தரசனம் செய்ததோடு தங்களின் காதல் மலர்ந்த இடத்திற்கே பத்திரிகையாளர்களை அழைத்து அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.
உடல்நலக்குறைவால் நயன்தாராவின் தாயாரால் திருமணத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என்று தகவல் சொல்லப்பட்டது. இதனால் இருவரும் கேரளாவுக்கு சென்று நயன்தாராவின் தாயாரோடு விருந்தில் கலந்து கொண்டதோடு அங்கேயே ஒரு வாரம் தங்கியிருந்தனர். இன்னொருபக்கம் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் – நயன்தாரா நடிக்கும் ஜவான் திரைப்படத்தின் படப்பிடிப்பும் இறுதிகட்டத்தில் இருப்பதாக தெரிகிறது.
இதையடுத்து இயக்குநரான அட்லியிடம் அனுமதி பெற்றுக்கொண்டு இருவரும் தேனிநிலவுக்காக தாய்லாந்து சென்றுள்ளதாக தகவல் வெளியானது. இதனைதொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தானும் நயன்தாராவும் எடுத்துக்கொண்ட கியூட்டான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் விக்னேஷ் சிவன். அந்த புகைப்படங்களை ஷேர் செய்து புதுமண ஜோடிகளுக்கு நெட்டிசன்கள் வாழ்த்துகளை பறக்கவிட்டு வருகின்றனர்.







