2024ம் ஆண்டுக்குள் நக்சல்கள் முற்றிலுமாக ஒழிக்கப்படும்- மத்திய அமைச்சர் அமித்ஷா

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் நாட்டில் நக்சல் நடவடிக்கைகள் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என மத்திய  உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். சத்தீஸ்கர் மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் கோர்பா பகுதியில் பாஜக பொதுக்குழு…

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் நாட்டில் நக்சல் நடவடிக்கைகள் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என மத்திய  உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் கோர்பா பகுதியில் பாஜக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த 2009ம் ஆண்டில் நக்சல் நடவடிக்கைகள் 2,258ஆக இருந்தது. கடந்த 2021ம் ஆண்டில் அது 509ஆக குறைந்துள்ளது. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறுவதற்குள் நாட்டில் நக்சல் நடவடிக்கைகள் முற்றிலுமாக ஒழிக்கப்படும். அதை நோக்கி மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்று கூறினார்.

நக்சல் பாதிப்பு அதிமாக காணப்பட்ட பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. ஆயுதங்களை ஏந்தி போராட்டத்தில் ஈடுபடுவர்களின் எண்ணிக்கையும் பெருமளவில் குறைந்துள்ளது.சத்தீஸ்கரில் கடந்த 5 ஆண்டு ஆட்சியில் காங்கிரஸ் அரசு மக்களுக்காக எதையும் செய்யவில்லை. மாநிலத்தில் ஊழல் பெருமளவில் அதிகரித்துள்ளது. குற்றச் செயல்களும் அதிகரித்துள்ளன. காங்கிரஸ் ஆட்சியில் பழங்குடியினருக்கு சொந்தமான காடுகள் அதிக அளவில் அழிக்கப்பட்டுள்ளன.

மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்காக மத்திய அரசு வழங்கும் தொகை அனைத்தையும் சொந்த பயன்பாட்டிற்காக காங்கிரஸ் கட்சியினர் உபயோகித்து வருகின்றனர். நடப்பாண்டில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸை ஆட்சியில் இருந்து அகற்றுவதே அவர்களுக்கு மக்கள் வழங்கம் தண்டனையாக இருக்கும்.

மத்தியில் ஏற்கனவே பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்திலும்பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்தால் மாநிலத்தின் வளர்ச் துரிதமடையும். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. நீட் தேர்வில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அந்த வகுப்பை சேர்ந்த தொழில்முனைவோர்களுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்று மத்திய அமைச்சர் அமித்ஷா கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.