டெல்லியில் கடும் பனிமூட்டம்; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

டெல்லியில் நிலவி வரும் கடும் பனிமூட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இந்த ஆண்டு வழக்கத்தைவிட குளிர் அதிகமாக நிலவி வருகிறது. இந்த குளிர்க்காலத்தில் இதுவரை இல்லாத வகையில் மிகக்குறைவான…

டெல்லியில் நிலவி வரும் கடும் பனிமூட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் இந்த ஆண்டு வழக்கத்தைவிட குளிர் அதிகமாக நிலவி வருகிறது. இந்த குளிர்க்காலத்தில் இதுவரை இல்லாத வகையில் மிகக்குறைவான 2.2டிகிரி செல்சியஸ் குளிர் நேற்று பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சாலைகளில் எதிரே வரும் முகப்பு விளக்குகளை எரியவிட்டாலும் தெரியாத அளவுக்கு கடுமையான மூடுபனி நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கபட்டுள்ளது. காலை வெகுநேரமானாலும் மூடுபனி காணப்படுகிறது. இதனால் சாலையில் வாகன ஓட்டிகள் பெருமளவில் சிரமப்படுகின்றனர். மேலும் கடும் மூடுபனி காரணமாக சாலைப்போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நிலவும் கடும் மூடுபனி காரணமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமான போக்குவரத்து பாதிதக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் வெகுநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து விமான பயணிகள் கூறுகையில், விமான நிலையத்தில் எதிரே வரும் வாகனம் கூட தெரியாத அளவுக்கு கடும் மூடுபனி இங்கு நிலவுகிறது. இந்த மூடுபனி காரணமாக விமானங்கள் தாமதாக இயக்கப்படுகிறது. இதனால் நாங்கள் வெகுநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. கடும் குளிரின் காரணமாக பெரும் அவதிக்குள்ளாகவதாக தெரிவித்தனர்.

மேலும் இந்த குளிரில் இருந்து விடுபட மக்கள் சாலையோரங்களில் தீமூட்டி குளிர்காயும் காட்சிகளும் காண முடிகிறது. மேலும் இந்த கடும் பனி காரணமாக ரயில் போக்குவரத்தும் தாமதமாகி உள்ளதாக ரயில் பணிகள் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.