ஆசிரியர் தேர்வு குற்றம்

கடற்படை அதிகாரி கடத்திக்கொலை… பணம் கேட்டு உயிருடன் எரிப்பு!

சென்னையில் கடற்படை அதிகாரி கடத்தப்பட்டு மகாராஷ்டிரா மாநில காட்டுப்பகுதியில் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜார்க்கண்ட் ராஞ்சி பகுதியைச் சேர்ந்த கடற்படை அதிகாரி சூரஜ் குமார் தூபே. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாக அவரது பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதற்கிடையில் மஹாராஷ்டிரா- குஜராத் எல்லை பகுதியில் எரிந்த நிலையில் ஒரு ஆண் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் 90 சதவீத தீக்காயங்களுடன் இருந்த உடலை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுதொடர்பான விசாரணையில் உயிரிழந்தது காணாமல் போன கடற்படை அதிகாரி சூரஜ் குமார் தூபே என தெரியவந்தது. இதுகுறித்த குறித்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

எரித்து கொலை செய்யப்பட்ட சூரஜ் குமார் தூபே கோவை ஐ.என்.எஸ் அக்ரனி கடற்படைதளத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். பணி விடுப்பில் இருந்த அவர் மீண்டும் பணியில் சேர கடந்த ஜனவரி 30ம் தேதி வீட்டில் இருந்து சென்றுள்ளார். அதன் பின்னர் அவருடைய செல்போன் சுவிட்ச் ஆஃப் ஆனதால், அவரை பெற்றோரால் தொடர்பு கொள்ள முடியாவில்லை. இதற்கிடையே, தனது மகனை கடத்தி வைத்துள்ளதாகவும், 10 லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்றும் கும்பல் ஒன்று மிரட்டல் விடுத்துள்ளது. இதனால், பயந்துபோன அவர்கள் ஜார்கண்ட் மாநில போலீசாரிடம் புகார் அளித்தனர்.

அதன்பிறகு, சென்னை போலீசாரின் உதவியோடு சென்னை விமான நிலையம் மற்றும் அதன் சுற்று பகுதியில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், ஜனவரி 31 ஆம் தேதி சென்னை விமான நிலையம் அருகே சூரஜை, 3 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி முனையில் கடத்தியது தெரியவந்தது.

சென்னையில் ஒரு இடத்தில் 3 நாட்கள் அடைத்து வைத்த கடத்தல் கும்பல், பணம் கிடைக்காததால் சூரஜை கொலை செய்ய திட்டமிட்டனர். அதன்படி, சென்னையிலிருந்து காரில் மகாராஷ்டிரா- குஜராத் எல்லை காட்டுப்பகுதியில் சூரஜை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்தது தெரியவந்தது. குற்றவாளிகளை விரைந்து பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் பணியாற்ற வந்த கடற்படை அதிகாரி சென்னையில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு, பணத்திற்காக 3 நாட்கள் மிரட்டி வைக்கப்பட்டதோடு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

ஜாமீனில் வந்தவர் கொலை செய்யப்பட்டதால் ஓசூரில் பரபரப்பு!

Jeba Arul Robinson

மதுபோதையில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை

Saravana Kumar

மாணவி கூட்டுப் பலாத்காரம்: ’மலை அடிவாரத்துக்கு காதலரோடு போனது ஏன்?’அமைச்சர் பேச்சால் சர்ச்சை

Gayathri Venkatesan

Leave a Reply