முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் சினிமா

‘நாட்டு நாட்டு’ இந்திய மக்களின் பாடல்; நடிகர் ராம் சரண்

ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடித்த ஆர்.ஆர்.ஆர். படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகி வெற்றி பெற்றது. மேலும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் பல்வேறு விருதுகளை குவித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் முன்பு கோல்டன் குளோப் விருதை வென்றது.

இந்நிலையில், கடந்த 13ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 95வது ஆஸ்கர் விழாவில் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றது. மேலும் ஆஸ்கர் மேடையில் நாட்டு நாட்டு பாடல் பாடப்பட்டதோடு, நடன கலைஞர் திரைப்படத்தில் வருவது போன்று உடையணிந்து நடனமாடினர். இந்நிலையில் ஆஸ்கர் விழாவிற்காக அமெரிக்கா சென்ற நடிகர் ராம் சரண் இன்று இந்தியா திரும்பினார். டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாட்டு நாட்டு பாடலுக்காக ஆஸ்கர் விருது வென்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இயக்குநர் ராஜமௌலி, இசையமைப்பாளர் கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோரின் கூட்டு முயற்சியால் தான் இந்த விருது கிடைத்துள்ளது. அவர்களின் கடின உழைப்புக்கு கிடைத்த விருது இது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை பார்த்து விட்டு அதில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலை சூப்பர் ஹிட் ஆக்கியதற்காக ரசிகர்கள் மற்றும் இந்திய மக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது எங்கள் பாடல் அல்ல. இது இந்திய மக்களின் பாடல் என்று ராம்சரண் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

5 ஆண்டுகளில் செய்யாததை 3 மாதங்களில் செய்ய நினைக்கிறார் முதல்வர்: ப.சிதம்பரம்

Nandhakumar

தொடர்ந்து சரிந்து வரும் இந்திய ரூபாயின் மதிப்பு

Web Editor

நியூஸ் 7 தமிழின் ஊரும் உணவும் திருவிழா – 2-வது நாளாக ஆர்வமுடன் வரும் பொதுமக்கள்

Dinesh A