நீங்கள் சாக்லேட் பானிபூரி சாப்பிட்டிருக்கீங்களா?

ஸ்டீர் ஃபுட் எனப்படும் தெருவோர உணவு வகைகளில் பெரும்பாலானோரின் முதல் விருப்பமாக இருப்பது பானிபூரி. வட இந்தியாவில் உணவு வகையான பானிபூரி அதிகம் பேர் விரும்புவர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பானிபூரி பிடிக்காதவர்கள்…

ஸ்டீர் ஃபுட் எனப்படும் தெருவோர உணவு வகைகளில் பெரும்பாலானோரின் முதல் விருப்பமாக இருப்பது பானிபூரி. வட இந்தியாவில் உணவு வகையான பானிபூரி அதிகம் பேர் விரும்புவர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பானிபூரி பிடிக்காதவர்கள் இல்லை என்று சொல்லலாம். இதில் பேல்பூரி, பானிபூரி மசாலா போன்ற பல வகை உணவு உள்ளது.

பொதுவாக அனைவருக்கும் பிடித்தமான உணவு வகைகளில் சிறிது மாற்றம் செய்து புதுவித உணவை (fusion dishes) தயாரிப்பார்கள். அதில் சில உணவுகள் மக்களிடம் வரவேற்பை பெறும். சில உணவுகளை மக்கள் விரும்பமாட்டார்கள்.அந்த வகையில் பானிபூரியில் மாற்றம் செய்து அதில் இனிப்பு சுவையுடன் கூடிய சாக்லேட் ப்ளேவரில் பானிபூரி தயாரிக்கப்பட்டது. இதன் நடுவில் ஐஸ்கிரீம் மற்றும் ஓரியோ பிஸ்கட்டுடன் வைத்து பரிமாறப்படும். ஆனால் இந்த வகை பானிபூரியை மக்கள் அதிகம் பேர் விரும்பவில்லை. அதன் காம்பினேஷன் பலராலும் எற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது.

இந்த சாக்லேட் பானிபூரி வீடியோவை ஒரு யூடியூப் சேனல் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், பானிபூரி விற்கும் ஒருவர், சில சாக்லேட் பானிபூரிகளை தட்டில் வைத்து, அதன் மேல் ஐஸ்கிரீம் மற்றும் உடைத்த ஓரியோ பிஸ்கட் துண்டுகளை வைத்து நிரப்புகிறார். தொடர்ந்து அதில் சாக்லேட் சிறப் ஊற்றி வாடிக்கையாளருக்கு பரிமாறுகிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.