ஸ்ரேயஸ் ஐயர் இல்லாதது…. ஹர்திக் பாண்டியா கூறியது இதுதான்?…

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரிலிருந்து ஸ்ரேயஸ் ஐயர் விலகியது உலகக் கோப்பையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஹார்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடர் நாளை…

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரிலிருந்து ஸ்ரேயஸ் ஐயர் விலகியது உலகக் கோப்பையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஹார்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடர் நாளை முதல் தொடங்குகிறது. இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி நாளை மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கவுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில், முதுகு வலியின் காரணமாக இந்திய அணியின் ஸ்ரேயர் ஐயர் விளையாடவில்லை. காயம் காரணமாக ஸ்ரேயஸ் ஐயர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரிலிருந்து விலகியுள்ளார். அவர் எப்போது அணிக்குத் திரும்புவார் என்பது உறுதியாகத் தெரியவில்லை. இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரிலிருந்து ஸ்ரேயஸ் ஐயர் விலகியுள்ளது உலகக் கோப்பையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ஹெலிகாப்டர் விபத்தில் வீர மரணமடைந்த மேஜர் ஜெயந்த்..!

இதுகுறித்து ஹர்திக் பாண்டியா பேசுகையில், உண்மையை சொல்ல வேண்டுமானால் எங்களுக்கு நேரம் அதிகம் இல்லை. இருக்கும் நேரத்தை சரியாகப் பயன்படுத்த வேண்டும். நான் முதுகில் ஏற்பட்ட காயத்தால் நீண்டநாள்கள் அவதிப்பட்டேன். அதனால் இந்திய அணியில் நீண்ட நாட்கள் என்னால் இடம்பெற முடியாமல் இருந்தது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஸ்ரேயஸ் ஐயர் இல்லாதது கண்டிப்பாக தாக்கத்தை ஏற்படுத்தும். இது உலகக் கோப்பைக்கான இந்திய அணியைத் தேர்வு செய்வதில் தாக்கத்தை ஏற்படுத்தும். அவரை நாங்கள் மிஸ் செய்கிறோம். ஆனால், நாங்கள் மெதுவாக நீண்டகால தீர்வைத் தேடி வருகிறோம். அவர் காயத்தில் இருந்து மீண்டு அணியில் இணைந்துவிட்டால் எங்களுக்கு அதை விட மகிழ்ச்சி வேறெதுவும் இல்லை. ஆனால், அவர் அணியில் இடம் பெற முடியாவிட்டால் அந்த தருணத்தில் என்ன செய்யப் போகிறோம் என்பது குறித்து அதிகம் சிந்திக்க வேண்டும்.

முதுகு வலியினால் அணியில் விளையாடாமல் இருந்த நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறுவார் என நம்புகிறேன். பும்ரா சில நாட்களாக காயம் காரணமாக அணியில் இல்லை. அவர் அணியில் இடம் பெறாதது அணிக்கு பின்னடைவாக இருப்பினும், இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் தங்களது பங்களிப்பை சிறப்பாக அளித்து வருகின்றனர்.

தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான், கில் களமிறங்குவார்கள். மைதானத்தின் தன்மை நன்றாக உள்ளது. நான் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக இந்த மும்பை வான்கடே மைதானத்தில் விளையாடி வருகிறேன். இரு அணிகளுக்கும் போட்டி சவாலானதாகவே இருக்கும் என்றார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.