முக்கியச் செய்திகள் இந்தியா விளையாட்டு

தேசிய விளையாட்டு போட்டிகள் – தடகளத்தில் தமிழக மகளிர் அணி சாம்பியன்

36-வது தேசிய விளையாட்டு போட்டிகளின் தடகளப் பிரிவில் சாம்பியன் பட்டத்தை தமிழ்நாடு மகளிர் அணி தட்டிச் சென்றுள்ளது.

இந்தியாவின் ஒலிம்பிக் என்று அழைக்கப்படும் 36-வது தேசிய விளையாட்டு போட்டிகள் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற வருகின்றது. இதில் நீச்சல், தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஆக்கி, கைப்பந்து உள்பட 36 விளையாட்டுகளில் இருபாலருக்கும் போட்டிகள் நடத்தப்படுகிறது. கோகோ, யோகா, மல்லர் கம்பம் ஆகியவை அறிமுக போட்டியாக இடம் பெற்றுள்ளன. 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்கள், சர்வீசஸ் ஆகியவற்றை சேர்ந்த சுமார் 7 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் தேசிய விளையாட்டுப் போட்டிகளின் தடகளப் பிரிவில் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது தமிழ்நாடு மகளிர் அணி. ஒட்டுமொத்தமாக 2வது இடத்தைப் பிடித்த தமிழ்நாடு, 7 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 18 பதக்கங்களை தடகளத்தில் கைப்பற்றியுள்ளது. மகளிர் பிரிவில் மட்டும் தமிழக வீராங்கனைகள் 4 தங்கம் உட்பட 9 பதக்கங்களை வென்றுள்ளனர்.

தமிழ்நாடு வீரர் வீராங்கனைகள் ஒட்டுமொத்தமாக 14 தங்கம், 14 வெள்ளி, 18 வெண்கலம் என மொத்தம் 46 பதக்கங்களை வென்றுள்ளனர். இதில் அர்ச்சனா சுசீந்திரன் 200 மீட்டர் தடகளப் போட்டியில் புதிய சாதனை படைத்துள்ளார். வித்யா ராம்ராஜ் 400 மீட்டர் தடையோட்டத்திலும், என்.அஜித் பளு தூக்குதலிலும் தேசிய சாதனை படைத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

குஜராத் கலவர வழக்கு – தீஸ்தா செதல்வாட் கைது

Mohan Dass

”அதிமுகவை அவமதிக்கும் நோக்கில் நிதி அமைச்சர் அதை செய்யவில்லை”

Janani

காரைக்குடியில் போலி ஆவணங்கள் மூலம் இடம் அபகரிப்பு

Vandhana