திண்டுக்கல் தனியார் கல்லூரியின் இயந்திரவியல் துறையும், இந்திய வாகன பொறியாளர்கள் கூட்டமைப்பும் இணைந்து தேசிய அளவிலான மிதிவண்டி வடிவமைப்பு போட்டியை நடத்தின.
திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் துறையும், இந்திய வாகன பொறியாளர்கள் கூட்டமைப்பும் இணைந்து, கல்லூரி முதன்மை தலைவர் ரகுராம் தலைமையில் மிதிவண்டி வடிவமைப்பு போட்டிகள் 2023 நடத்தப்பட்டது.
உடல் ஆரோக்கியம், எரிபொருள் சிக்கனம், சுற்றுச்சூழல் மாசுபடுதலை தவிர்த்தல் ஆகியவை மிதிவண்டியின் பயன்களாகும். அந்தவகையில், மிதிவண்டிகளை விதவிதமாக வடிவமைத்து, புதுமையான தயாரிப்புகளை பொறியியல் கல்லூரி மாணவர்கள் வழங்கியுள்ளனர். கூடுதல் பற்சக்கரங்கள் இணைத்தல், காற்று அடிக்கும் பம்பு இணைத்தல், பிரேக்கிங் சிஸ்டம், சோலார் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு கூடுதல் வடிவமைப்புகளுடன் மிதிவண்டிகள் குறைந்த விலையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மிதிவண்டுகளில் சிறந்த வடிவமைப்புடன் அமைக்கப்பட்ட மிதிவண்டிகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இப்போட்டியில், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து 42 அணிகள் பங்கேற்றன. நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் கல்லூரி முதல்வர் வாசுதேவன், இயந்திரவியல் துறை தலைவர் கண்ணன், இந்திய வாகன பொறியாளர்கள் கூட்டமைப்பின் செயலாளர் சிவா, புது பொருள் வடிவமைப்பின் ஆலோசகர் செல்வமணி ஆகியோர் கலந்து கொண்டு, மாணவர்களின் புதுமையான முயற்சிகளை ஊக்கப்படுத்தும் வகையில் உரையாற்றினர்.
—சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: