மத்தியப்பிரதேச மாநிலம், இந்தூரில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கோயிலை நகராட்சி ஊழியர்கள் இடித்து அகற்றினர்.
கடந்த வாரம் ராம நவமியை முன்னிட்டு கோயிலில் திரண்ட ஏராளமான பக்தர்களில் பலரும் அந்தப் பாலங்களின்மீது நின்றுகொண்டு இருந்தபோது எடை தாங்காமல் கான்கிரீட் மூடிகள் உடைந்தன.
பக்தர்கள் பலரும் கிணற்றுக்குள் விழுந்தனர். கிணற்றின் சுவரும் இடிந்து விழுந்ததால் இடிபாடுகளில் பலரும் சிக்கிக்கொண்டனர். அந்தத் துயர சம்பவத் தில் 35 பேர் மரணமடைந்துவிட்டனர். 14 பேர் மீட்கப்பட்டனர். டஜன் கணக்கான பக்தர்கள் காயம் அடைந்துள்ளனர்.
இதில் 35 பேர் உயிரிழந்தன நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் கோயிலில் சோதனை நடத்தப்பட்டது. அதில், கிணற்றின் மேல் சட்டவிரோதமாக கட்டடம் கட்டப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து கோயில் நிர்வாகத்தின் தலைவர் மற்றும் செயலாளர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் 304-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்தூர் நகர காவல் ஆணையர் மக்ரந்த் தியோஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து கோயிலை இடிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து சட்டவிரோதமாக கட்டப்பட்ட கோயிலை புல்டோசரை கொண்டு நகராட்சி ஊழியர்கள் இடித்து அகற்றினர்.







