முக்கியச் செய்திகள் தமிழகம்

வீடுகளில் விதிமுறைகளை பின்பற்றி தேசியக் கொடியை பறக்க விடலாம்-வானதி சீனிவாசன்

தேசிய கொடியின் அளவு மாறுதல், எந்த துணியிலும் தயாரித்தல், கோவில், வீடு, அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் விதிமுறைகளை பின்பற்றி அவமரியாதை செய்யாமல் பறக்க விடலாம் என விதிகள் தளர்த்தபட்டுள்ளது என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

வருகின்ற ஆகஸ்ட் 15-ம் தேதி தேசியகொடியை ஏற்ற வேணடும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தேசியக் கொடியை பறக்கவிட இருக்ககூடிய சட்டங்களில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

தேசிய கொடியின் அளவு மாறுதல், எந்த துணியிலும் தயாரித்தல், கோவில், வீடு, அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் விதிமுறைகளை பின்பற்றி அவமரியாதை செய்யாமல் பறக்க விடலாம் என விதிகள் தளர்த்தபட்டுள்ளது.

ஜெம் போர்டில் அரசு நிறுவனங்கள் இரண்டு கோடிக்கு ஆடர்கள் கொடுத்துள்ளன. இருபது கோடி கொடிகள் தயராகி வருகின்றது. கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்ததில் தேசிய கொடி தனி கவுன்டர் ஓபன் செய்யப்பட்டது. அங்கு தனியாக பெட்டி வைக்கபட்டுள்ளது.

அதில் முடிந்த பணத்தை போட்டு விட்டு கொடியை எடுத்துக் கொள்ளலாம். கடந்த வாரம் தொண்டாமுத்தூர் அட்டுகல் பகுதியில் சேவை நிறுவனத்தின் பெயரில், கருணை பயணம் என்ற பெயரில் இல்லம் நடத்துகிறோம் என நல்ல உடல்நலத்துடன் இருப்பவர்களை வலுகட்டயாமாக மொட்டையடித்து, ஆடைகளை அவிழ்த்துவிட்டு சட்டவிரோதமா அடைத்து வைத்ததோடு, ஆதார் கார்டு உள்ளிட்ட அடையாளங்களை எரித்துள்ளனர்.

சட்டவிரோதமாக அடைத்து வைத்த அந்த கட்டிடம் சில சட்டவிரோத சம்பவங்கள் நடத்தப்பட்டால் கடந்த இரண்டு ஆண்டுக்கு முன் சீல் வைக்கப்பட்டதாக தெரிய வருகிறது.

திமுக நிர்வாகிகள் ரவி மற்றும் ஒரு சில நிர்வாகிகள் உதவியோடு கட்டடம் திறக்கபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கைது செய்யபட்டவர்கள் தொடர்பான உறுதியான நடவடிக்கைகள் இல்லை. மாநில அரசு கடுமையாக இல்லாமல் மென்மையான செயலை செய்து அந்த நிறுவனத்திற்கு துணை போகும்செயலை செய்து கொண்டிருக்கிறது. இதற்கு சிபிசிஐடி விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட வேண்டும்.

மதமாற்றத்திற்கு துணை செய்கின்ற வகையில் இதுபோன்ற நிறுவனங்களை நடத்தி வருபவர்களுக்கு இந்த குற்றப் பின்னணயின் தன்மையை கருத்தில் கொண்டு முதல்வர் கருணை பயணம் மற்றும் பிளஸ் இந்தியா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் மாவட்ட பாஜக மிகப் பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும். இதற்கு பின்னால் முக்கிய நபர்களை காப்பாற்ற மாவட்ட நிர்வாகம், காவல் துறையினர் துணை போகின்றனர் என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

செஸ் ஒலிம்பியாட் 10 சுற்று ஆட்டங்கள் முடிவு; டாப் 10 அணிகள் என்னென்ன?

G SaravanaKumar

இலங்கையில் பள்ளிகளை மூட உத்தரவு

Web Editor

குழந்தை திருமணம் செய்தால் குண்டர் சட்டம்- எஸ்.பி.எச்சரிக்கை

G SaravanaKumar