முக்கியச் செய்திகள் தமிழகம்

மின் கட்டண உயர்வால் சிறு-குறு தொழிற்சாலைகள் பாதிக்கும்-வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

தமிழக அரசின் மின்கட்டண உயர்வை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் பாஜக சார்பில் கண்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது பேசிய பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், மின் கட்டண உயர்வால் சிறு-குறு தொழிற்சாலைகள் பாதிக்கும் என்றார்.

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்ட பாஜகவினர் நுற்றுகணக்கானோர் பங்கேற்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதில் வானதி சீனிவாசன் கூறியதாவது:

எதிர்கட்சியாக இருந்த போது போராடியவர், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு விலைவாசி உயர்வுக்கு காரணமாக மாறிவிட்டனர். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

பொய் பித்தலாட்டம் திமுகவின் டி.என்ஏவிலேயே இருக்கிறது. ஊழல் இல்லாத ஆட்சி வேண்டும் என்றே மக்கள் வாக்களித்தார்கள். கோவையில் எந்த சாலையும் புனரமைப்பு பணிகளும் இல்லை, சாலைக்காக ஒதுக்கிய 200 கோடி எங்கே??

கோவையில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் இன்னும் தொடங்கவில்லை. பராமரிப்பு பணிகள் கூட நடக்கவில்லை. கோவை மக்களை கொலுசு கொடுத்து ஏமாற்றினார்கள். சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளது. எடுத்துக்காட்டு கள்ளக்குறிச்சி சம்பவம்.

வன்முறையை பாஜகவினர் ஆதரிப்பதில்லை. ஆனால் மக்களை வன்முறை சூழ்நிலைக்கு தள்ளியது திமுக அரசு.  மின் கட்டண உயர்வால் சிறு-குறு தொழிற்சாலைகள் கடுமையான சூழலுக்குத் தள்ளப்படுகின்றன. 100 யூனிட் இலவச திட்டத்தில் கட்டுபாடுகள் விதித்து ஏழை எளிய மக்களை ஏமாற்றுகிறார்கள்.

பெரியார் வழியில் செல்ல தள்ளுவதாக நீலகிரி எம்.பி பேசுகிறார். இந்தியாவிலிருந்து பிரித்து தனி தமிழ்நாடு வேண்டும் என்று சொல்ல திமுகவிற்கு தைரியம் இருக்கிறதா? நான் சவால் விடுகிறேன்.

இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை பிரிக்க நினைப்பது பிரிவினை தான். தமிழகத்திற்கு ஒவ்வொரு முறையும் உதவி செய்வது பாஜக தலைமையிலான மத்திய அரசு தான். மத்திய அரசு விலை உயர்வை கொண்டு வர வேண்டும் என்று கூறவில்லை. மத்திய அரசு நஷ்டத்தில் இருக்கும் நிர்வாகத்தை சரி செய்யுமாறு கூறியது. அதை புரிந்து கொள்ளாமல் மத்திய அரசு மீது பழி போடுகிறார்கள்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லியில் இருக்கும் சூழல் காரணமாக போராட்டத்தில் பங்கு கொள்ள முடியவில்லை. தமிழகத்தில் எந்த பிரச்சனை என்றாலும் முதல் குரலை பாஜக தான் கொடுக்கிறது. மின் கட்டண உயர்வால் ஊழியர்களின் சம்பள பிரச்சனையில் எதிரொலிக்கும்.

மது விலை அதிகரித்தபோது அதுக்கு காரணம் பாஜக தான் சொன்னாங்களா? சொல்ல மாட்டாங்க. ஏனெனில் அது மாநில அரசுக்கு இலாபம் என்றார் வானதி சீனிவாசன்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வெங்கடேசன் எம்.பி. கடிதத்திற்கு இந்தியன் வங்கி பதில்

Web Editor

கர்நாடகா : சாலைகளை சீரமைக்க கோரி சமூக ஆர்வலர் நூதன போராட்டம்

Dinesh A

நான் ஓட்டுக்காக நிற்கவில்லை நாட்டுக்காக நிற்கிறேன்: சீமான்

எல்.ரேணுகாதேவி