முக்கியச் செய்திகள் தமிழகம்

மழைநீர் வடிகால் சீரமைப்பு பணியில் இடர்பாடுகள் உள்ளது – அமைச்சர்

சென்னையில் மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகளில் சில இடர்பாடுகள் உள்ளதால் காலதாமதமாவதாகவும், விரைவில் அந்த பணிகள் முடிவடையும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

 

சென்னையில் உள்ள ரிப்பன் மாளிகை அருகே உள்ள பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகளை தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர்
கே.என்.நேரு நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

மழை நீர் வடிகால் சீரமைப்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர், அந்த பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, தென் சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை ஏற்கனவே ஆய்வு செய்திருந்ததாகவும் அதன் தொடர்ச்சியாக தற்போது வடசென்னை பகுதியில் ஆய்வு செய்து வருவதாகவும் கூறினார்.

 

மரங்கள், கம்பங்கள், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்டவை காரணமாக மழை நீர் வடிகால் சீரமைப்பு பணிகள் சற்று இடர்பாடுகளை சந்திப்பதாகவும் விரைவில் அந்த பணிகள் முழுமை பெறும் எனவும் கூறினார். அது தொடர்பாக நாளை மின்வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தார்.

பெருமளவு மழையின் போது ரிப்பன் மாளிகையில் அதிகளவு தண்ணீர் தேங்கும் சூழ்நிலை உள்ளதாக கூறிய அவர், அதற்கு மெட்ரோ ரயில் பணியின் போது இந்த வழி அடைக்கப்பட்டதே காரணம் என்றார். எனவே ரயில்வே துறையிடம் அனுமதி பெற்று சென்டரல் ரயில் நிலையம் அருகில் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக கூறினார். மழை நீர் வடிகால் அமைப்பதில் பல இடங்களில் 70 முதல் 80 சதவீத பணிகள் முடிவடைந்து உள்ளதாகவும், தற்போது 4 ஆயிரம் கோடி ரூபாய் பதிப்பில் 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார்.

 

இந்த பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்தந்தாரர்களை அழைத்து அறிவுறுத்தி யுள்ளதாகவும், பருவமழைக்கு முன்பாக எவ்வளவு சீக்கிரம் மழை நீர் வடிகால் பணிகளை முடிக்க முடியுமோ அதை முடிக்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும் கே.என்.நேரு தெரிவித்தார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

EZHILARASAN D

சென்னையில் பாஜக பிரமுகர் வெட்டி கொலை

G SaravanaKumar

அறநிலையத் துறைக்கு சொந்தமான ரூ.500 கோடி மதிப்புள்ள நிலங்கள் மீட்பு: அமைச்சர்

EZHILARASAN D