முக்கியச் செய்திகள் தமிழகம்

கள்ளக்குறிச்சி-தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தில் இயங்கிவரும் தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்து கொண்ட பெண் உயிரிழந்ததை அடுத்து அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து,  அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகிலுள்ள கூவாடு கிராமத்தைச் சேர்ந்த
பெரியநாயகம் (37) என்பவருக்கு தியாகதுருகம் – சேலம் மெயின் ரோடு பகுதியில்
உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று மதியம் கரு கலைப்பு செய்யப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின்னர் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பெண் பெரியநாயகம்
உயிரிழந்தார். இதனால் அந்த மருத்துவமனை முன் அவரது உறவினர்கள் திரண்டனர்.

இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது .இதனை அடுத்து கள்ளக்குறிச்சி கூடுதல் எஸ்பி ஜவஹர்லால் தலைமையில் கள்ளக்குறிச்சி டிஎஸ்பி புகழேந்தி கணேசன் மற்றும் போலீசார்கள் அந்த மருத்துவமனை பகுதிக்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காவல் துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

703 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி!

Arivazhagan Chinnasamy

தொழில்துறையினருடன் முதல்வர் இன்று ஆலோசனை!

உயிரிழந்த கபடி வீரர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியளித்த ஆர்.கே.சுரேஷ்

EZHILARASAN D