தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அட்=இந்தியப் பொறியியலின் தந்தை எனப் போற்றப்படும் சர் எம். விஸ்வேஸ்வரய்யா அவர்களின் பிறந்தநாளை தேசிய பொறியாளர் நாளாகக் கொண்டாடும் இந்நாளில், தேசத்தின் உள்கட்டமைப்பை நாளும் செதுக்கிவரும் பொறியியல் வல்லுநர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்!
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமையின் துணையுடன் நவீன இந்தியாவைக் கட்டமைப்பதில் பொறியாளர்களின் பங்கு மகத்தானது. சாலைகள், பாலங்கள், அணைகள், விண்வெளி ஆய்வுகள், டிஜிட்டல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, பசுமை ஆற்றல் என நாட்டின் அனைத்துத் துறைகளின் வளர்ச்சியிலும் நமது பொறியாளர்களின் திறனும், உழைப்பும் மிளிர்கின்றன.
பொறியாளர்களின் அறிவாற்றலும் புதுமையான சிந்தனையும் வளமான, வலிமையான, முன்னேற்றம் மிக்க நாட்டினை உருவாக்கத் தொடர்ந்து துணை நிற்கட்டும்!
#CMJosephVijay




