தேசிய கல்விக் கொள்கை கல்வியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தக்கூடியது -ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்திய அரசாங்கம் நீண்ட ஆண்டுகளுக்குப் பின்னர் தேசிய கல்விக் கொள்கை 2020 சிறந்த கல்விக் கொள்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தக்கூடியது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நிகழ்ச்சியில் பேசுகையில் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி எளாவூரில்…

இந்திய அரசாங்கம் நீண்ட ஆண்டுகளுக்குப் பின்னர் தேசிய கல்விக் கொள்கை 2020 சிறந்த கல்விக் கொள்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தக்கூடியது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நிகழ்ச்சியில் பேசுகையில் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி எளாவூரில் பிரன்டியர் சைன்ஸ் பார்க்கில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கல்வி நிறுவனத்திற்கு அடிக்கல் நடும் விழாவில் கலந்துகொண்டு ஆளுநர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

பின்னர் தமிழக ஆளுநர் பேசுகையில், இந்திய அரசாங்கம் நீண்ட ஆண்டுகளுக்குப் பின்னர் தேசிய கல்விக் கொள்கை 2020 சிறந்த கல்விக் கொள்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தக் கூடியது. ஏற்கனவே 2016 ஆம் ஆண்டு 18 ஆம் ஆண்டு சீரமைக்கப்பட்டது என்றார்.

அத்துடன், மாணவர்கள் தங்களை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் கல்வி என்பது தரமான கல்வியாகக் கல்வி முறை இருக்க வேண்டும். ஏற்கனவே மருத்துவத்துறையில் சிறந்து விளங்கிய செரியன் கல்வி துறையிலும் சிறந்து விளங்க வேண்டும் என கூறினார்.

மேலும், தானும் 8கிலோ மீட்டர் நடந்து சென்று மின்சார வசதி சாலை வசதி இன்றி மழைக்கால காலங்களில் செருப்பை கைகளில் தூக்கிச் சென்று பள்ளிக்குப் போய் வந்ததையும் மண் எண்ணை விளக்கில் படித்ததாக ஆளுநர் ஆர் என் ரவி கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.