கே.ஜி. முதல் பி.ஜி வரை பெண்களுக்கு இலவச கல்வி: குஜராத் தேர்தலில் பாஜக வாக்குறுதி

கே.ஜி முதல் பி.ஜி வரை பெண்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என குஜராத்தில் பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  குஜராத் சட்டபேரவை தேர்தல் இரண்டு கட்டங்களாக வரும் 1 மற்றும் 5ந்தேதிகளில் நடைபெற…

கே.ஜி முதல் பி.ஜி வரை பெண்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என குஜராத்தில் பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

குஜராத் சட்டபேரவை தேர்தல் இரண்டு கட்டங்களாக வரும் 1 மற்றும் 5ந்தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலையொட்டி ஆளும் பாஜக சார்பில் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இதனை வெளியிட்டார். பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அம்சங்களில் முக்கியமானவற்றை பார்ப்போம்.

குஜராத் தேர்தலில் பாஜக வாக்குறுதிகள்

1. அடுத்த 5 ஆண்டுகளில் இளைஞர்களுக்கு 20 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

2. பெண்களுக்காக மட்டுமே அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் அரசு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

3. பெண்களுக்கு மழலையர் பள்ளி முதல் முதுகலை பட்ட படிப்புவரை இலவசமாக தரமான கல்வி வழங்கப்படும்.

4. பெண்களில் மூத்த குடிமக்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம்.

5. குஜராத் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்

6. குஜராத் ஒரு லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்றப்படும்.

7. இரண்டு கடல் உணவு பூங்காக்கள் அமைக்கப்படும.

8. நீர்பாசான வசதிகளை அதிகரிக்க 25 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும.

9. தேசவிரோத சக்திகள், தீவிரவாதிகளை கண்டறிந்து ஒடுக்குவதற்கென தனி பிரிவு தொடங்கப்படும்

10. கோயில்களை புதுப்பிக்கவும், அவற்றின் சிறப்புகளை பிரபலப்படுத்தவும் ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும்

11. மீன்பிடித் தொழிலுக்கான கட்டமைப்புகளை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை குஜராத் சட்டப்பேரவை தேர்தலையொட்டி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் பாஜக அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.