முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தேசிய கீதத்தில் வரும் திராவிடம் என்பது 5 மாநிலங்களை உள்ளடக்கியது – ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்

தேசிய கீதத்தில் வரும் திராவிடம் என்பது தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட 5 மாநிலங்களை உள்ளடக்கியது என்றும், தற்போது தமிழ் மட்டுமே என கூறப்பட்டு வருவதாகவும் ஆளுநர் ரவி விளக்கமளித்துள்ளார்.

 

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஒரே பாரதம் உன்னத பாரதம் இணைக்கும் பாரதம் தொடர் திட்டம் குறித்த இரண்டு நாள் கருத்தரங்கை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். இந்த இரண்டு நாள் கருத்தரங்கத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைகழகம், திருவள்ளுவர் பல்கலைகழகம் உள்ளிட்ட 9 பல்கலைக்கழகங்களில் இருந்து 156 மாணவ மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, வெள்ளையர்கள் தான் இந்தியாவை இணைத்தனர் என பலர் நினைக்கின்றனர். ஆனால் அது உண்மை இல்லை. இந்தியா என்பது எப்போதும் ஒருவர் ஆட்சிக்கு கீழ் இருந்தது இல்லை. ஆங்கிலேயர்கள் 1905-ஆம் ஆண்டு வங்கத்தை மேற்கு வங்கம், கிழக்கு வங்கம் என மத அடிப்படையில் பிரிக்கப்பட்ட நேரத்தில் தமிழகத்தில் வா.உ.சி, பாரதியார் போராடினார்கள் என்றார். இந்தியாவை தெரிந்துகொள்ள புரிந்து கொள்ள வேண்டும் என்றால் பாரதம் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

 

பாரதம் என்பது பல்வேறு கலாச்சாரங்கள் அடிப்படையில் கொண்டது. ஆனால் பாரதம் என்பது யாரோ ஒருவரின் கீழ் இருப்பதில்லை, அது எப்போதும் தர்மத்தை கடை பிடிப்பதாக இருந்தது. அரசர்கள் தர்மத்தை மீறினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. 1956ஆம் ஆண்டு வரை மதராஸ் மைதானமாக இருந்தது அதன் பின் மொழி அடிப்படையில் கேரளா, கர்நாடக, ஆந்திரா அதிலிருந்து தற்போது தெலுங்கானா என அரசியலுக்காக மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டது.

பல நூறு ஆண்டுகளாக ஒற்றுமையாக இருந்தவர்கள் நான், நீ என தற்போது பேசி வருகின்றனர். தேசிய கீதத்தில் வரும் திராவிடம் என்பது தமிழ்நாடு தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கியது தான். ஆனால் தற்போது திராவிடம் என்றால் தமிழ் என கூறப்பட்டு வருகிறது.

 

அரசியல் கட்சிகள் நம்முடைய பார்வையை குறுக்கி உள்ளன. அரசியல் கட்சிகள் அதிகாரத்கிற்காக மொழி அடிப்படையிலும்,சாதி அடிப்படையிலும், சாதியின் உட்கட்டமைப்புகளை எல்லாம் வைத்து அரசியல் செய்வார்கள் இதனைத்தான் நமக்கு கூறி வருகின்றனர். ஆனால் இந்தியா என்பது அடிப்படையில் அனைவருக்கும் இடையே உள்ள கலாச்சாரம் மற்றும் ஆன்மிக ஒற்றுமை தான் என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

’வந்த கண்ணனும், நின்ற கந்தனும்…’

Arivazhagan Chinnasamy

சென்னையில் மது பாட்டிலில் இறந்து கிடந்த பூச்சிகள்..

G SaravanaKumar

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ ரெய்டு

Web Editor