முக்கியச் செய்திகள் தமிழகம்

உதகையிலிருந்து கோத்தகிரி சென்ற லாரி 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

கோத்தகிரி பகுதியில் நள்ளிரவு பெய்த கனமழை காரணமாக உதகையிலிருந்து
கோத்தகிரி செல்லும் மலைப்பாதையில் சென்ற சரக்கு லாரி கட்டுப்பாட்டை இழந்து
நிலை தடுமாறி 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில்
லாரி ஓட்டுநர் சந்தோஷ் மற்றும் கிளீனர் ஆகிய இருவர் சிறு காயங்களுடன்
அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள கூக்கல் தொரை கிராமத்தில் சுகுனி,
புரோக்கோலி உள்ளிட்ட இங்கிலீஷ் காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி
செய்யப்படுகிறது.  இங்கு சாகுபடி செய்யப்படும் இங்கிலீஷ் காய்கறிகள் பெங்களூர் பகுதிக்கு லாரிகள் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதேபோல் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கூக்கல் தொரை கிராமத்தில் சாகுபடி
செய்யப்பட்ட காய்கறிகள் லாரி மூலம் பெங்களூர் பகுதிக்கு கொண்டு சென்று
இறக்குமதி செய்த பின் மீண்டும் பெங்களூர் பகுதியில் இருந்து கோத்தகிரி அருகே
உள்ள கூக்கல் தொரை கிராமத்தை நோக்கி ஓட்டுனர் சந்தோஷ் மற்றும் கிளீனர்
கோகுல்ராஜ் ஆகியோர் லாரியை இயக்கி வந்துள்ளனர்.


அப்போது உதகையிலிருந்து கோத்தகிரி செல்லும் மலை பாதையில் நள்ளிரவு பெய்த கன
மழை காரணமாக சாலை முழுவதும் கடும் மேகமூட்டம் காணப்பட்டதால் உதகையிலிருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் அமைந்துள்ள பாக்கியநகர் பகுதியில் சரக்கு லாரி கட்டுப்பாட்டை இழந்து நிலைத்தடுமாறி 200 அடி பள்ளத்தில் தாழ்வான பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தின் போது லாரி ஓட்டுநர் சந்தோஷ் மற்றும் கிளீனர் கோகுல்ராஜ் ஆகிய இருவர்
லாரியில் இருந்து வெளியே குதித்ததால் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக
உயிர் தப்பினர்.

விபத்து தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற 108 ஆம்புலன்ஸ்
ஓட்டுநர்கள் விபத்தில் காயமடைத்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம்
கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும் சரக்கு லாரி விபத்துக்குள்ளானது தொடர்பாக கோத்தகிரி காவல்துறையினர்
வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சிறுமுகை வனப்பகுதியில் 8 மாத குட்டி யானை உயிரிழப்பு

G SaravanaKumar

’இபிஎஸ்-க்கு சுயமரியாதை இல்லாமல் போய்விட்டதை கண்டு நாங்கள் வருத்தப்படுகிறோம்’ – கனிமொழி எம்.பி

EZHILARASAN D

அதிமுக அலுவலக விவகாரம்: ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

Web Editor