முக்கியச் செய்திகள் தமிழகம்

சிறுநீரகத்தை தானமாக கொடுக்க முன்வந்த தந்தை: அன்பு பாலம் மூலம் உதவ கோரிக்கை

இராமேஸ்வரத்தில் இரண்டு சிறுநீரகம் செயலிழந்து உயிருக்கு போராடும் இளம்பெண்,
மகளின் உயிரைக் காப்பாற்ற தனது சிறுநீரகத்தை தானமாக கொடுக்கும் தந்தை,
மருத்துவ செலவிற்கு பணம் இன்றி பரிதவிக்கும் மீனவ குடும்பம், நியூஸ் 7 அன்பு
பாலம் மூலம் அரசு உதவிக்கரம் நீட்ட கோரிக்கை விடுத்துள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் அடுத்த கடற்கரை மாரியம்மன் கோவில் தெரு
பகுதியை சேர்ந்த சதீஷ்குமார்- பிரியா தம்பதிகளுக்கு கடந்த மூன்று
ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிலையில் மீனவர் சதீஷ்குமார் கடலுக்கு சென்று மீன்பிடி தொழில் செய்து
அதன் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து எல்லோரும் போலும் தம்பதிகள்
இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்தநிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு 25 வயதான இளம் பெண் பிரியாவுக்கு
திடீரென தலைவலி, காய்ச்சல் உள்ளிட்டவை ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை
பெற்று வந்த நிலையில் வலிப்பு ஏற்பட்டு இளம் பெண் பிரியா சுயநினைவை இழந்து
கோமா நிலைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து தனது சக்திக்கு மீறிய பணத்தை செலவு செய்து கணவர் மற்றும் அவருடைய
தாய், தந்தை உள்ளிட்ட மீனவ குடும்பத்தினர் எல்லோரும் சேர்ந்து மருத்துவமனையில்
பிரியாவுக்கு சிகிச்சை பார்த்த நிலையில் அவருக்கு இரண்டு சிறுநீரகமும்
செயலிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியதை அடுத்து என்ன செய்வதென்று
தெரியாமல் மீனவ குடும்பங்கள் அதிர்ச்சியில் உறைந்து உள்ளது.

இதனையடுத்து பிரியாவின் தந்தை ராசு தனது மகள் ஒவ்வொரு நாளும் சிறுநீரகம்
செயலிழந்து உயிருக்கும் போராடி வருவதை பார்த்து மனம் நொந்து கவலை அடைந்து
வந்துள்ளார்.


இந்த நிலையில் பிரியாவின் தந்தை ராசு தம் வாழ்ந்து முடிந்து விட்டோம் தன்னுடைய
மகள் வாழக்கூடிய வயதை உள்ளதால் மகளின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற
நோக்கத்தோடு பிரியாவின் தந்தை ராசு அவருடைய சிறுநீரகத்தை தானமாக கொடுக்க
முன்வந்ததை அடுத்து மருத்துவமனையில் பரிசோதனைகள் நடத்தப்பட்டு அவரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக ரூ.7 லட்சம் முதல் 8 லட்சம் வரை
செலவாகும் என்று மருத்துவர்கள் கூறியதை அடுத்து மருத்துவ செலவிற்கு கூட
பணமில்லாமல் தனது மகள் உயிரை காப்பாற்ற தந்தையும், மீனவ குடும்பமும்
பரிதவித்து வருகின்றது.

மேலும் மீனவர் குடும்பத்தின் மருத்துவ செலவிற்காக நியூஸ் 7 அன்பு பாலத்துடன்
இணைந்து வெளிநாடு வாழ் நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சேர்ந்து 38 ஆயிரம்
ரூபாய் மற்றும் ஒரு மாதத்திற்க்கான மளிகை பொருட்களை வழங்கி உள்ளனர். இவர்களைப் போன்று மற்றவர்களும் உதவிக்கரம் ஈட்ட வேண்டும் என மீனவ குடும்பங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மகளின் உயிரைக் காப்பாற்ற தனது சிறுநீரகத்தை தானம் செய்ய முன்வந்த போதும்
மருத்துவ செலவிற்கு பணம் இன்றி பரிதிவிக்கும் தந்தையின் கவலையும்,
ஏக்கத்தையும் போக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ
குடும்பங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்- மேயர் பிரியா

G SaravanaKumar

இரா.நெடுஞ்செழியன் சிலையை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

G SaravanaKumar

மதுரைவாசிகளின் பாதிபேர் வீட்டு மொய் நோட்டில் இடம்பெற்றிருக்கும் கிரம்மர் சுரேஷ்.!

Halley Karthik