மகளிர் உரிமைத் தொகை வழங்க வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நரிக்குறவர் இன மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை, அம்பத்தூர் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் சிக்னலில் சாலை ஓரத்தில் 50க்கும்
மேற்பட் நரிக்குறவர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தங்குவதற்கு வசதி இல்லாமல் பாலத்தின் கீழ் வசித்து வருகிறார்கள்.
அம்பத்தூர் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் தாங்கள் போதிய அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல் கஷ்டப்படுவதாக குற்றம் சாட்டினர். மேலும், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டைகள் இருப்பினும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காமல் அவதி அடைவதாகவும் கூறினர்.
இதையும் படியுங்கள்:மேச்சலுக்கு சென்ற 4 பசுமாடுகள் மின்சாரம் தாக்கி பலி!
அதனை தொடர்ந்து, குழந்தைகளை வைத்து கஷ்டப்பட்டு வருகிறோம் மற்றும் நல்ல உணவு கூட கிடைக்காமல் அல்லபடுகிறோம் என்று கூறினர். மேலும், எங்களுக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, இருப்பினும் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் கிடைக்காமல் அவதி அடைந்து வருகிறோம் என தெரிவித்தனர்.
இதனை அடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் எங்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவ வேண்டுமென முதலமைச்சருக்கு நரிக்குறவர் இன மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.







