மேச்சலுக்கு சென்ற 4 பசுமாடுகள் மின்சாரம் தாக்கி பலி!

செங்கல்பட்டு மாவட்டம், திருவாத்தூர் அருகே மேச்சலுக்கு சென்ற 4 பசுமாடுகள் மின்சாரம் தாக்கியதால் உயிரிழந்தன. செங்கல்பட்டு மாவட்டம், திருவாத்தூர் பகுதியை சேர்ந்த லலிதா மற்றும் வெங்கடேசன் தம்பதியினர். இருவரும் மாடுகளை வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில்…

செங்கல்பட்டு மாவட்டம், திருவாத்தூர் அருகே மேச்சலுக்கு சென்ற 4 பசுமாடுகள் மின்சாரம் தாக்கியதால் உயிரிழந்தன.

செங்கல்பட்டு மாவட்டம், திருவாத்தூர் பகுதியை சேர்ந்த லலிதா மற்றும் வெங்கடேசன் தம்பதியினர். இருவரும் மாடுகளை வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் வழக்கம் போல் தங்களுடைய மாடுகளை மேச்சலுக்கு வயல்வெளிக்கு ஓட்டியிருந்தனர். 

இதையும் படியுங்கள்:சபரிமலை ஐயப்பன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் | ஒரே நாளில் 52,000 பேர் சாமி தரிசனம்..

அப்போது, எதிர்பாராத விதமாக அறுந்து கிடந்த மின்சார கம்பியில்  மாடுகள் மிதித்ததில் நான்கு மாடுகளும் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது.இந்த சம்பவம் குறித்து அப்பகுதி பொது மக்கள்  போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து, பொது மக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த அணைக்கட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.