கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிரா மாநிலத்துக்கு தேவையான உதவிகள் அளிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நாராயண் ரானே உறுதி அளித்துள்ளார்.
தென்மேற்கு பருவமழை காரணமாக மகாராஷ்டிராவின் மேற்கு பகுதிகள் மற்றும் கடலோர பகுதிகளில் உள்ள மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. குறிப்பாக மாகாத் அருகில் உள்ள தாலியே மலைகிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதில் அந்த கிராமத்தில் வசித்த 50-க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மத்திய அமைச்சர் நாராயண் ரானே இன்று தாலியே கிராமத்தில் பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நாராயண் ரானே,”பிரதமர் நரேந்திரமோடி மகாராஷ்டிரா மாநிலத்தில் நேரிட்ட வெள்ளப்பாதிப்புகள் குறித்து என்னிடம் விசாரித்தார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து அறிக்கை தரும்படி என்னிடம் கேட்டுக்கொண்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு நிச்சயம் உதவி செய்யும். தாலியே கிராமத்தை மறுபடி புதுப்பிக்கவும் உதவி செய்யப்படும்,” என்று கூறினார்.