ஸ்டேன் சாமி அஸ்தியை தோளில் சுமந்து திமுக எம்.பி. அஞ்சலி

மறைந்த சமூக ஆர்வலர் ஸ்டேன் சாமியின் அஸ்தியை சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் தோளில் சுமந்து சென்று அஞ்சலி செலுத்தினார். திருச்சியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான ஸ்டேன் சுவாமி, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு…

மறைந்த சமூக ஆர்வலர் ஸ்டேன் சாமியின் அஸ்தியை சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் தோளில் சுமந்து சென்று அஞ்சலி செலுத்தினார்.

திருச்சியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான ஸ்டேன் சுவாமி, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பழங்குடி மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக குரல் கொடுத்து வந்தார்.

கடந்த 2018ஆம் ஆண்டு, உபா சட்டத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், உடல் நலக்குறைவால் கடந்த 5 ஆம் தேதி உயிரிழந்தார்.

ஸ்டேன் சாமியின் அஞ்சலி நிகழ்வு

இந்நிலையில், சேலத்தில் உள்ள குழந்தை இயேசு பேராலயத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

இதற்காக ஸ்டேன் ஸ்வாமியின் அஸ்தி சேலத்திற்கு கொண்டுவரப்பட்டது. இந்நிகழ்வில் பங்கேற்ற சேலம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர், எஸ்.ஆர். பார்த்திபன், ஸ்டேன் சுவாமியின் அஸ்தியை தோளில் சுமந்து கொண்டு வந்து, அவரது உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.