#Nandhan | “மக்களை சுரண்டும் அரசியல்வாதிகளை தோலுரித்துக் காட்டியுள்ளது ‘நந்தன்’ திரைப்படம்” – #Annamalai !

நந்தன் திரைப்படம் தங்கள் சுயலாபத்திற்காகப் பட்டியலின மக்களைச் சுரண்டி ஆட்சி செய்யும் சர்வாதிகார அரசியல் வாதிகளைத் தோலுரித்துக் காட்டியிருக்கிறது என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார். ரா.சரவணன் இயக்கத்தில் சசிக்குமார் நடிப்பில் உருவான…

#Nandhan | "The movie 'Nandhan' has exposed politicians who exploit people" - #Annamalai !

நந்தன் திரைப்படம் தங்கள் சுயலாபத்திற்காகப் பட்டியலின மக்களைச் சுரண்டி ஆட்சி செய்யும் சர்வாதிகார அரசியல் வாதிகளைத் தோலுரித்துக் காட்டியிருக்கிறது என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார்.

ரா.சரவணன் இயக்கத்தில் சசிக்குமார் நடிப்பில் உருவான திரைப்படம் நந்தன். இத்திரைப்படத்தில், பாலாஜி சக்திவேல், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார். இப்படம் கடந்த செப்.20-ம் தேதி வெளியான நிலையில், மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்திற்கு பல தரப்பினரும், அரசியல் தலைவர்களும் வாழ்த்துகள் தெரிவித்திருந்தனர். அந்த வகையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நந்தன் படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

“OTT தளத்தில் ‘நந்தன்’ திரைப்படத்தைப் பார்த்தேன். பட்டியலின மக்களை முன்னேற்றுகிறோம் என்ற பெயரில் தங்கள் சுயலாபத்திற்காகப் பட்டியலின மக்களைச் சுரண்டி ஆட்சி செய்யும் சர்வாதிகார அரசியல் வாதிகளைத் தோலுரித்துக் காட்டியிருக்கிறது இத்திரைப்படம். தனது தேர்ந்த நடிப்பின் மூலம் பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர்கள் படும் இன்னல்களை நம் கண்முன் கொண்டு வந்த நடிகர் சகோதரர் சசிக்குமார்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

பட்டியலின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட ஊராட்சிகளில் நடக்கும் அவல அரசியலை உள்ளபடியே காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் இரா.சரவணனுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். பல ஆழமான கருத்துக்கள் நிறைந்த ‘நந்தன்’ திரைப்படம் காலத்திற்கும் மக்கள் மனதில் இடம் பெற்றிருக்கும் என்பதில் சந்தேகமில்லை” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.