#Telangana | Driving கற்றுக் கொண்டபோது கட்டுப்பாட்டை இழந்து குளத்தில் பாய்ந்த கார்!

தெலங்கானாவில் டிரைவிங் கற்றுக்கொண்டபோது கார் குளத்தில் பாய்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தெலங்கானா மாநிலம், ஜனகாம நகரில் 2 இளைஞர்கள் கார் ஓட்டி கற்றுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த இளைஞர்களுடன் பயிற்சியாளரும் காரில்…

தெலங்கானாவில் டிரைவிங் கற்றுக்கொண்டபோது கார் குளத்தில் பாய்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தெலங்கானா மாநிலம், ஜனகாம நகரில் 2 இளைஞர்கள் கார் ஓட்டி கற்றுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த இளைஞர்களுடன் பயிற்சியாளரும் காரில் பயணித்துள்ளார். அந்த சமயத்தில் டிரைவர் இருக்கையில் இருந்த இளைஞர் பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலரேட்டரை அழுத்தியுள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த குளத்தில் பாய்ந்தது.

இதனைத் தொடர்ந்து, சுதாரித்துக்கொண்ட இளைஞர்கள் காரின் ஜன்னல் வழியாக நீரில் குதித்து காரில் இருந்து வெளியேறினர். அப்போது, குளத்தில் கார் கிடந்ததையும், இளைஞர்கள் நீரில் நீந்திக்கொண்டிருந்ததை கவனித்த பொதுமக்கள் சிலர் குளத்தில் குதித்து அவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து கிரேன் உதவியுடன் கார் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.