Gold Rate | இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த சில மாதங்களாக தங்கம் புதிய உச்சம் தொட்டு வருகிறது. அந்த வகையில், தங்கம் விலை கடந்த டிச.22ம் தேதி ரூ.1 லட்சத்தை தாண்டி அதிர்ச்சி அளித்தது. அதன்பிறகு, தங்கம் ஏற்ற இறக்கத்தை சந்தித்து ஆட்டம் காட்டியது. இருப்பினும், தங்கம் விலை ரூ.1 லட்சத்திற்கு குறையாமல் விற்பனையாகி வருகிறது.

இந்த சூழலில், நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,20,200-க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.275 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15,025-க்கு விற்பனையானது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,960-க்கும், சவரனுக்கு ரூ.520 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,19,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை தொடர்ச்சியாக இன்றும் உச்சம் அடைந்துள்ளது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், கிலோவுக்கு ரூ.12,000 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.3,87,000-க்கும், கிராமுக்கு ரூ.12 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.387-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.