நக்சிவன் டிரோன் தாக்குதல் : ஈரானிலிருந்து தூதரக ஊழியர்களை திரும்ப பெரும் அஜர்பைஜான்……….!

நக்சிவன் சர்வதேச விமான நிலைய டிரோன் தாக்குதலை தொடர்ந்து ஈரானிலுள்ள தனது தூதரக ஊழியர்களை அஜர்பைஜான் திரும்ப பெற்றுள்ளது.

ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையே போர் நடைபெற்று வருகிறது. காமேனி கொலைக்கு பழி வாங்கப்படும் என்று சபதமெடுத்துள்ள ஈரான், இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இதற்கிடையில் நேற்று அஜர்பைஜானின் நக்சிவன் சர்வதேச விமான நிலையப் பகுதியில் டிரோன் தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் இருவர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஈரானே காரணம் என்று அஜர்பைஜான் அரசு குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ஈரானிலுள்ள தனது தூதரக ஊழியர்களை திரும்ப பெருவதாக அஜர்பைஜான் அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ஈரான் தலைநகரில் உள்ள தெஹ்ரானில் உள்ள தூதரகத்த்லிருந்து அதிகாரிகள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.