வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து மற்றும் மேகாலயா சட்டப்பேரவை தேர்தல் இன்று நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. கடந்த 16ம் தேதி 60 தொகுதிகளை கொண்ட திரிபுரா சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் சுமார் 86 சதவீதம் வாக்குகள் பதிவானது.
இந்நிலையில் இன்று நாகாலாந்து மற்றும் மேகாலாய சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. இரு மாநிலங்களிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேகாலயாவில் சோகியாங் தொகுதி ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான லிங்டோவின் திடீர் மரணத்தால் அந்த தொகுதிக்கான தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. எனவே மீதமுள்ள 59 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது.