முக்கியச் செய்திகள் தமிழகம்

ஈரோட்டில் தேர்தல் விதிமீறல் – திமுகவினர் மீது இன்பதுரை மீண்டும் புகார்

திமுகவினர் தேர்தல் ஆணைய விதிமுறைகளை மீறுவதாக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு மின்னஞ்சல் மூலமாக புகார் அனுப்பியுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று ஜனநாயக கடைமை ஆற்றி வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஈரோடு கிழக்குத் தொகுதியில் உள்ள 238 வாக்குச்சாவடிகளிலும் இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இடைத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில், அதிமுக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை, திமுகவினர் தேர்தல் ஆணைய விதிமுறைகளை மீறுவதாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு மின்னஞ்சல் மூலமாகப் புகார் அனுப்பியுள்ளார். அதில், விதிமுறைகளை மீறி அசோகபுரம் 138, 139 வாக்குச் சாவடி அருகே திமுகவினர் கட்சிக் கொடியுடன் இருக்கின்றனர். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவும் செய்து வருகின்றனர். ஆனால், இதுவரை போலீஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மேலும், கச்சேரி வீதியில் உள்ள 180 வது வார்டில் ஆதார் அடையாள அட்டையுடன் சென்றால் வாக்காளர்களை வாக்களிக்க அனுமதி மறுக்கின்றனர். இப்பிரச்னையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு ஜனநாயகத்தை காப்பற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கனமழை: 21 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

Halley Karthik

ஒரு சூறாவளி கிளம்பியதே! ரெய்னா தாண்டவம் தொடங்கியதே!

EZHILARASAN D

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நலத்திட்டங்கள்: அமைச்சர் தலைமையில் குழு!

EZHILARASAN D