நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் முல்லை பூக்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
ஆயக்காரன்புலம், கருப்பம்புலம், மருதூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் முல்லைப் பூ சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், முல்லைப்பூக்களின் விலை தற்போது மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனைlத் தெரிவித்துள்ளனர்.

ஊரடங்கு காலத்திற்கு முன் ஒரு கிலோ முல்லை பூ 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.







