முக்கியச் செய்திகள் உலகம்

டேனிஷ் சித்திக் உடல் ஜாமியா மில்லியா இஸ்லாமியா கல்லறையில் அடக்கம் செய்ய அனுமதி

ஆப்கானிஸ்தான் மோதலின் போது கொல்லப்பட்ட ராய்டர் நிறுவனத்தின் புகைப்பட நிபுணர் டேனிஷ் சித்திக்கின் உடல் டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான கல்லறையில் அடக்கம் செய்யப்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ராய்ட்டர் நிறுவனத்தின் புகைப்பட நிபுணர் டேனிஷ் சித்திக், கொரோனா தொற்று மரணங்கள் குறித்து எடுத்த புகைப்படங்கள் சர்வதேச அளவில் பேசப்பட்டன. ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப்படையினருக்கும், தாலிபான்களுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதலை புகைப்படம் எடுக்கச் சென்ற சித்திக் ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையருகே காந்தகார் மாநிலம் ஸ்பின் போல்டாக் மாவட்டத்தில் கடந்த 16ம் தேதி கொல்லப்பட்டார். அவரது மரணம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்தியரான டேனிஷ் சித்திக் உலகின் பெருமை மிக்க புலிட்சர் விருது உள்ளிட்ட பல சிறப்புகளைப் பெற்றவராவார். இந்த நிலையில் அவரது உடல் டெல்லி கொண்டு வரப்பட்டு ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான கல்லறையில் அடக்கம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

 

சித்திக் குடும்பத்துக்கும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்துக்கும் நீண்ட தொடர்புகள் உண்டு. சித்திக்கின் தந்தை முகமது அக்தர் சித்திக் ஜாமியா பல்கலைக்கழகத்தின் கல்வி பிரிவில் பேராசிரியராகப் பணியாற்றிவர், ஜாமியா நகரில்தான் அவர் தங்கியிருந்தார். சித்திக் ஜாமியா பள்ளியில்தான் படித்தார். ஜாமியா பல்கலைக்கழகத்தில் பொருளாதார இளநிலை பட்டமும், மாஸ் கம்யூனிகேஷனில் முதுகலைப்படமும் பெற்றிருக்கிறார்.

இந்த நிலையில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் நஜ்மா அக்தர், சித்திக் குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்தார். அப்போது பல்கலைக்கழகத்தின் சார்பில் சித்திக் மனைவி ரிகேயிடம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார். பல்கலைக்கழக வளாகத்தில் வரும் செவ்வாய்கிழமையன்று சித்திக்கை நினைவு கூறும் வகையில் நினைவஞ்சலி கூட்டம் நடத்தப்பட உள்ளதாக கூறியுள்ளார். சித்திக்கின் புகைப்படங்களை கொண்ட ஒரு கண்காட்சி குறிப்பிட்ட காலத்துக்கு நடத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பாளர் அகமது அஜீம், துணைவேந்தர், சித்திக் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல சென்றிருந்தபோது, சித்திக்கின் உடலை பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான கல்லறையில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அவர்களின் வேண்டுகோள் ஏற்கப்பட்டுள்ளது,” என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

உலகின் அதிக விலைக்கு விற்பனையான 90’s கிட்ஸ்களின் ஃபேவரெட் வீடியோ கேம்

Halley Karthik

கடலில் காற்றாலை; ஸ்காட்லாந்து செல்லும் அமைச்சர்

Arivazhagan Chinnasamy

இந்திய செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய தயாராக இருக்கிறது முதல் தனியார் ராக்கெட்

NAMBIRAJAN