தமிழகம் செய்திகள்

கடல் சீற்றம் காரணமாக மீன்பிடிக்க செல்லாத வேதாரண்யம் மீனவர்கள்!

வேதாரண்யத்தில் பலத்த காற்று வீசுவதால் 5000 மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

நாகை மாவட்டம் வேதாரண்யம் கடல் பகுதியில் பலத்த காற்று வீசுவதால் கடல் சீற்றமாகக் காணப்படுகிறது. கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் இன்று மீன் பிடிக்க செல்லவில்லை. ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளபள்ளம், கோடியக்கரை, மனியன்தீவு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 5,000 க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.

—-ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தொழிற்சங்க போராட்டம் என்பது அவர்கள் எடுத்த முடிவு : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Halley Karthik

நெல்லை – தென்காசி இடையே அதிவேக ரயில் சோதனை ஓட்டம்!

Syedibrahim

“வாக்குறுதியைத் தள்ளுபடி செய்துள்ளீர்களே”-அண்ணாமலை

Halley Karthik