திண்டிவனத்தை அடுத்த ஓங்கூர் அருகே இருசக்கர வாகன திடீரென நிலை தடுமாறி தடுப்புக்கட்டையில் மோதி விபத்துக்குள்ளானதில், மகன் கண் முன்னே தாய் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சூர்யா (19)கல்லூரி மாணவரான இவா்
திண்டிவனம் அடுத்த நடுவனந்தல் புதூர் கிராமத்தில் தனது உறவினரின் மஞ்சள்
நீராட்டு விழா நிகழ்ச்சியை முடித்துவிட்டு தனது தாய் அனுசியா உடன் சென்னைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது திண்டிவனம் அடுத்த ஓங்கூர் சுங்கசாவடி அருகே வரும் போது திடீரென நிலை தடுமாறி இருசக்கர வாகனம் தடுப்புக்கட்டையில் மோதி விபத்துக்குள்ளானதில், மகன் சூர்யா கண் முன்னே பரிதாபமாக அனுசியா உயிரிழந்தார் .மேலும் கல்லூரி மாணவர் சூர்யா படுங்காயங்களுடன் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த விபத்தால் திண்டிவனம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்து போக்குவரத்தை போலீசார் சரி செய்தனர். மகனுடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற தாய் மகன் கண் முன்னே இறந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
—-ரூபி







