நாகை சிபிசிஎல் குழாய் உடைப்பு; 20 மணி நேர போராட்டத்திற்கு பின் சீரமைப்பு!

நாகை அருகே நாகூர் பட்டினச்சேரி மீனவர் கிராம கடலில் சிபிசிஎல் குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டது. நாகை அருகே நாகூர் பட்டினச்சேரி மீனவக் கிராமத்தில சென்னை பெட்ரோலியத்திற்கு சொந்தமான குழாய் நேற்று முன்தினம் உடைப்பு…

நாகை அருகே நாகூர் பட்டினச்சேரி மீனவர் கிராம கடலில் சிபிசிஎல் குழாய் உடைப்பு
சரி செய்யப்பட்டது.

நாகை அருகே நாகூர் பட்டினச்சேரி மீனவக் கிராமத்தில சென்னை பெட்ரோலியத்திற்கு
சொந்தமான குழாய் நேற்று முன்தினம் உடைப்பு ஏற்பட்டு பல ஆயிரம் லிட்டர் கச்சா
எண்ணெய் கடலில் கலந்துள்ளது. இதனால் பட்டினச்சேரி சம்மந்தன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் கண் எரிச்சல், வாந்தி மயக்கம் உள்ளிட்டவைகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

இதையும் படிக்கவும் : அய்யா வைகுண்டரின் 191வது அவதார தினம்; சந்தன குடம், முத்துக்குடை ஏந்தி ஊர்வலம்

தொடர்ந்து நேற்று காலை முதல் மதியம் வரை குழாய் உடைப்பை சீரமைக்கும் பணியில்
ஊழியர்கள் முழு வீச்சில் ஈடுபட்டு வந்த நிலையிலும் கடல் சீற்றம் காரணமாக
நேற்று மாலை பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு தற்காலிகமாக மண் மூட்டைகள் கொண்டு மேலும் கச்சா எண்ணெய் பரவாமல் தடுக்கப்பட்ட நிலையில், இன்று நள்ளிரவு கடல் நீர்மட்டம் குறைந்ததால் சீரமைப்பு பணிகள் மீண்டும் தொடங்கியது.

இந்த நிலையில் பணிகள் இரவிலும் தொடர்வதால் அங்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக
பகல் போல் காட்சி அளிக்கும் அளவில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு அனைத்து
துறையினரும் முழு வீச்சில் பணியில் ஈடுபட்டு வந்தனர்.


கச்சா எண்ணெய் கடலில் எந்த அளவு பரவி உள்ளது என இந்திய கடலோர காவல் குழுமத்தின் சார்பாக இரண்டு கப்பல்கள் மற்றும் டோர்னியோ விமானம் மூலம் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதனை எடுத்து இந்திய கடலோர காவல் படை சார்பாக ஆயில் பரவி உள்ள இடங்களில் அதன் தன்மையை செயலிழைக்கும் வகையில் Oil Spill Dispersant (OSD) ரசாயனம் கடலில் சிறு கப்பல் மூலம் தெளிக்கப்பட்டது.

இதனால் கடல் மற்றும் நிலம் பகுதிகளில் மனிதர்கள் மட்டுமல்லாமல் உயிரினங்களும் பாதிக்காது என அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஜேசிபி மற்றும் ஹிட்டாச்சி இயந்திரம் மூலமாக கடற்கரையில் பள்ளம் தோண்டப்பட்டு கச்சா எண்ணெய் குழாய் உடைப்பு சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றது. சுமார் 20 மணி நேரம் நடைபெற்ற பணி இன்று அதிகாலை நான்கு மணி அளவில் குழாய் உடைப்பு வெற்றிகரமாக சீரமைக்கப்பட்டது.

திருச்சி மண்டல ஐஜி ஜெயச்சந்திரன் மற்றும் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்களும் மீனவர்களும் அச்சுறுத்தல் நீங்கி மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.