அய்யா வைகுண்டரின் 191வது அவதார தின விழாவை ஒட்டி நாகர்கோவிலில் இருந்து பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. சந்தன குடங்கள், முத்துக் குடைகள் ஏந்தி பல்லாயிரக்கணக்கானோர் தலைமைப்பதியான சாமிதோப்புக்கு சென்றனர்.
அய்யா வழி மக்கள் தெய்வமாக போற்றி வழிபடும் அய்யா வைகுண்டரின் 191 வது
அவதார தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி திருவனந்தபுரத்தில் இருந்தும் திருச்செந்தூரிலிருந்து வெவ்வேறு பேரணிகள் நேற்று இரவு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை வந்து அடைந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையும் படிக்கவும் : மாசி பௌர்ணமி பிரதோஷம்; சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்
இன்று காலை நாகர்கோவிலில் இருந்து தலைமை பதியான சுவாமி தோப்பிற்கு பிரம்மாண்ட பேரணி துவங்கியது. சந்தன குடங்கள், முத்துக் குடைகள் ஏந்தியபடி பெண்கள், சிறுவர்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் இதில் கலந்து கொண்டனர்.மேளதாளங்கள் முழங்க சென்ற இந்த பேரணியில் சிறுமிகளின் கோலாட்டம் நடந்தது.
இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அய்யா ஹர ஹர ஐயா சிவ சிவ என கோஷமிட்டபடி
சென்றனர். பேரணியை பின் தொடர்ந்து நூற்றுக்கணக்கான அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள் சென்றன. அய்யா வைகுண்டரின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் அய்யா வைகுண்டர் 191 வது அவதார தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் அவதார பதியில் அதிகாலை தாலாட்டு, பள்ளி உணர்தல், அபயம் பாடுதல் நடைபெற்றது. சூரிய உதயத்தில் கடல் பதமிட்டு அய்யா வைகுண்டரை அழைத்து வருதல், அய்யா வைகுண்டருக்கு பணிவிடை, அன்னதானம் நடைபெறுகிறது. இதையொட்டி கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.