இத்தாலி தலைநகர் ரோமில் புத்தாண்டை கொண்டாடும் விதமாக பொதுமக்கள் நடத்திய வானவேடிக்கையால் நூற்றுக்கணக்கான பறவைகள் உயிரிழந்தன.
உலகம் முழுவதும் ஒரு ஆண்டு நிறைவடைந்து புதிய ஆண்டு பிறக்கும்போது அதனை வரவேற்க உலகெங்கிலும் உள்ள மக்கள் பட்டாசுகளை வேடித்து வானவேடிக்கைகள் நிகழ்த்தி வரவேற்பது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு புத்தாண்டை வரவேற்கும் விதமாக இத்தாலி தலைநகர் ரோமில் பொதுமக்கள் நடத்திய வானவேடிக்கையால் நூற்றுக்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழந்துள்ளன. இதனை விலங்குகள் நல அமைப்புகள் படுகொலை என வர்ணித்துள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது தொடர்பாக தெரிவித்துள்ள விலங்குகள் நல அமைப்பின் செய்தித்தொடர்பாளர் லோரெடானா டிக்லியோ, புத்தாண்டு அன்று மக்கள் நிகழ்த்திய இடைவிடாத வானவேடிக்கைகளால் பறவைகள் அச்சம் மற்றும் மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம், ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டுக்கு பட்டாசு வெடிப்பதால் காட்டு மற்றும் வீட்டு விலங்குகளுக்கு துன்பத்தையும் காயத்தையும் ஏற்படுத்துகின்றன என தெரிவித்தார்.