முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ரூ.40 ஆயிரம் கோடி கடன் வழங்க நபார்டு திட்டம்!

நபார்டு வங்கி மூலம் 2021-22-ம் ஆண்டில் ரூபாய் 40 ஆயிரம் கோடி வரை கடன் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நபார்டு வங்கி தலைமை பொது மேலாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய நபார்டு வங்கியின் தலைமை பொது மேலாளர் செல்வராஜ், “ 2021-22-ம் ஆண்டில் 40 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் அளிக்க நபார்டு வங்கி திட்டமிட்டுள்ளது. 2020-21-ம் நிதி ஆண்டில் நபார்டு வங்கி மூலம் 27 ஆயிரத்து 104 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. நபார்டு வங்கி மூலம் கூட்டுறவு வங்கிகள் 38% அதிக அளவில் கடன் பெற்றுள்ளது.

வணிக வங்கிகள் 29%, கிராம வங்கிகள் 21%, தனியார் நிறுவன வங்கிகள் 12% கடன் பெற்றுள்ளதாக குறிப்பிட்டார். கூட்டுறவு வங்கியில் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் அடுத்த ஆண்டு கூட்டுறவு வங்கியில் அதிகளவில் கடன் வாங்க வாய்ப்புள்ளது. மேலும் தமிழக அரசுக்கு 16 வகையான திட்டங்களுக்காக ரூபாய் 31 கோடி இலவசமாக நிதியை நபார்டு வங்கி வழங்கியதாகவும் நபார்டு வங்கி தலைமை பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

Advertisement:

Related posts

வேளாண் சட்டத்திற்கு எதிரான தீர்மானம்: ஸ்டாலின்

L.Renuga Devi

பொதுமக்களின் குறைகளை தீர்க்க தனி இலாகா உருவாக்கப்படும்! – மு.க.ஸ்டாலின்

Nandhakumar

ஆ.ராசா விதி மீறி செயல்பட்டு வருகிறார்: அமைச்சர் ஜெயக்குமார்

Niruban Chakkaaravarthi