சட்டம் ஒழுங்கு: திமுக மற்றும் தவெக அரசுகளுக்கு இடையே எந்த வித்தியாசமும் இல்லை – நயினார் நாகேந்திரன்…!

சட்ட ஒழுங்கு விவகாரத்தில் முந்தைய திமுக அரசுக்கும், தவெக அரசுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் திமுக ஆட்சியில் நிகழ்ந்து வந்த குற்றச் சம்பவங்கள் தவெக ஆட்சியிலும் தொடர்வதாக குற்றம் சாட்டி வருகிறார். இந்த நிலையில் இன்று அவர் தமிழ் நாடு பொறுப்பு ஆளுநர் ஆர்.வி.அர்லேக்கரை நேரில் சந்தித்தார்.

கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இச்சந்திப்பில் அவர் மனு ஒன்றினையும் அவர் ஆளுநரிடம் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது:

உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பெண் குழந்தைகளுடன் நடந்து கொண்ட விதம் குறித்தும், அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்கள் அல்லாத தனிநபர்கள் ஜான் ஆரோக்கியசாமியும், விஷ்ணு ரெட்டியும் கலந்து கொண்டிருக்கிறார்கள். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநரிடம் நாங்கள் மனு கொடுத்திருக்கிறோம்.

தவெக அரசு பொறுப்பேற்று 54 நாட்களில், 151 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், 85-க்கும் மேற்பட்ட படுகொலைகள் நடந்திருக்கின்றன. கடந்த கால திமுக அரசுக்கும், இந்த அரசுக்கும் எந்த வித்தியாசமும் இல்லாமல் இருக்கிறது. முதலமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார் என்று ஆளுநரிடம் மனு மூலமாக தெரிவித்திருக்கிறோம். என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.