முதலமைச்சர் டெல்லி பயணத்தின் விவரங்கள்

4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பயண அட்டவணை குறித்த விவரங்கள். இன்று பிற்பகல் 1 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மோடியை சந்தித்து திமுக…

4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பயண அட்டவணை குறித்த விவரங்கள்.

இன்று பிற்பகல் 1 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மோடியை சந்தித்து திமுக கட்சி அலுவலக திறப்பு விழாவிற்கு அழைப்பிதழ் வழங்க உள்ளார்.

இந்த சந்திப்பின்போது, நீட் விவகாரம், மேகதாது அணை விவகாரம், தமிழ்நாட்டிற்கு தேவையான நிதி, ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை பிரதமரிடம் வலியுறுத்தவுள்ளார்.

பின்னர், பிற்பகல் 2 மணிக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசுகிறார். (நிதின் கட்கரியின் இல்லம்), பிற்பகல் 3.30 மணிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா-வை நாடாளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து பேசவுள்ளார்.

மாலை 4.30 மணிக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அவரது இல்லத்தில் சந்திக்கவுள்ளார். நாளை காலை 10.30 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அவரது இல்லத்தில் சந்தித்து பேசுகிறார்

மாலை 4.30 மணிக்கு மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயலை அவரது அலுவலகமான உத்யோக் பவனில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.