உணவு, பழங்களை சாப்பிட்டுவிட்டு 2 வீடுகளில் நகை பணம் கொள்ளையடித்த மர்ம நபர்கள்

மதுரை அருகே 2 வீடுகளில் நகை பணம் கொள்ளையடித்த மர்ம நபர்கள் உணவு, பழங்களை சாப்பிட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். மதுரை மாவட்டம் கூடக்கோவில் ஒத்தவீடு பகுதியைச் சேர்ந்த சசிக்குமார், தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு மாடி…

மதுரை அருகே 2 வீடுகளில் நகை பணம் கொள்ளையடித்த மர்ம நபர்கள் உணவு, பழங்களை சாப்பிட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

மதுரை மாவட்டம் கூடக்கோவில் ஒத்தவீடு பகுதியைச் சேர்ந்த சசிக்குமார், தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு மாடி அறையில் தூங்க சென்றுள்ளார். நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், நடிகர் வடிவேலு போல் வீட்டின் சமையலறைக்குள் சென்று அங்கிருந்த உணவு, குளிர்சாதன பெட்டியில் இருந்த பழங்களை சாப்பிட்டு விட்டு 3 பவுன் நகைகள், 10 ஆயிரம் பணத்தை திருடிச்சென்றுள்ளனர்.

அண்மைச் செய்தி: ‘8 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் எண்ணிக்கை 110’

மேலும், அருகே இருந்த மாயகிருஷ்ணன் வீட்டுக்குள் புகுந்த அந்த மர்ம நபர்கள், அங்கு தூங்கிக் கொண்டிருந்த இருளாயி அணிந்திருந்த 5 சவரன் நகையை பறித்துள்ளனர். அப்போது, திடுக்கிட்டு எழுந்த இருளாயி கூச்சலிட்டதால், கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.

தொடர்ந்து அப்பகுதி மக்கள் அந்த மர்ம நபர்களை விரட்டிச் சென்றும் அவர்களைப் பிடிக்க முடியாததால் போலீசாருக்கு தகவல் தந்துள்ளனர். தகவலின் பேரில் விரைந்து வந்த கூடக்கோவில் போலீசார் விசாரணை நடத்தியதில் 2 வீடுகளிலும் அந்த கும்பல் 8 பவுன் நகை, ரூ. 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடியது தெரியவந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.