8 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் எண்ணிக்கை 110

8 ஆண்டுகளில் இந்நிய பிரதமர் நரேந்திர மோடி 110 வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை மேற்கொண்டுள்ளார். நரேந்திர மோடி, இந்திய பிரதமராக பதவியேற்று 8 ஆண்டுகள் ஆகின்றன. அவர் கடந்த 2014-ஆம் ஆண்டு மே மாதம் முதன்முறையாக…

8 ஆண்டுகளில் இந்நிய பிரதமர் நரேந்திர மோடி 110 வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை மேற்கொண்டுள்ளார்.

நரேந்திர மோடி, இந்திய பிரதமராக பதவியேற்று 8 ஆண்டுகள் ஆகின்றன. அவர் கடந்த 2014-ஆம் ஆண்டு மே மாதம் முதன்முறையாக பதவியேற்றார். காங்கிரஸை தவிர்த்த வேறு கட்சி மத்தியில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது அதுவே முதன்முறை. பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றது முதல் தற்போது வரை 60-க்கும் மேற்பட்ட நாடுகளை உள்ளடக்கிய 110 வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை அவர் மேற்கொண்டுள்ளதாக தரவுகள் கூறுகின்றன. இந்த பயணக்கள் மூலமாக இந்தியாவின் உலகளாவிய அந்தஸ்தை அதிகரிக்கும் முயற்சியில் பிரதமர் உலக அரங்கில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.

அதன்படி, பிரதமர் நரேந்திர மோடி 2014-ஆம் ஆண்டில் 9 சுற்றுப்பயணங்களையும், 2015-ஆம் ஆண்டில் 28 சுற்றுப்பயணங்களையும், 2016-ஆம் ஆண்டில் 18 சுற்றுப்பயணங்களையும், 2017-ஆம் ஆண்டில் 14 சுற்றுப்பயணங்களையும், 2018-ஆம் ஆண்டில் 23 சுற்றுப்பயணங்களையும், 2019-ஆம் ஆண்டில் 14 சுற்றுப்பயணங்களையும், 2020-ஆம் ஆண்டில் 0 சுற்றுப்பயணங்களையும், 2021-ஆம் ஆண்டில் 4 சுற்றுப்பயணங்களையும், 2022-ஆம் ஆண்டில் 4 சுற்றுப்பயணங்களையும் மேற்கொண்டுள்ளார்.

இதில் 2015-ஆம் ஆண்டில் அவர் அதிகபடியான சுற்றுப்பயணங்களை மேற்கொண்டுள்ளார். இதேபோல, 2018ஆம் ஆண்டிலும் பிரதமர் மோடி 20-க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார். இருப்பினும், தேர்தல் ஆண்டான 2019-ல் 14 ஆகக் குறைந்தது குறிப்பிடத்தக்கது. 2020-ஆம் ஆண்டில், உலகின் பெரும்பாலான நாடுகள் கொரொனா காரணமாக தடை விதிக்கப்பட்டு இருந்ததால், ​​​​பிரதமர் மோடி அந்த கால கட்டத்தில் எந்த நாட்டிற்கும் செல்லவில்லை.

அண்மைச் செய்தி: ‘தலைமைக்கு இனி யாரும் தர்ம சங்கடத்தை உருவாக்கிட வேண்டாம் – உதயநிதி ஸ்டாலின்’

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிப்பொறுப்புக்கு வந்து 8 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் வகையில், அக்கட்சி சார்பில் கொண்டாட்ட பாடல் வெளியிடும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 2014ஆம் ஆண்டுக்கு பிறகு அரசு நிர்வாகத்தின் செயல்பாடு மாறியுள்ளதாகவும், ஒரு பொறுப்பான அரசு மத்தியில் உள்ளதாகவும் தெரிவித்தார். 8 ஆண்டுகளுக்கு முன்பு அரசின் திட்டங்கள் காகித அளவில் மட்டுமே இருந்த நிலையில், பாஜக ஆட்சியில் திட்டம் அறிவிக்கப்பட்டது முதல் செயல்படுத்தப்படும் வரை தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாக தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.