நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங் சடலமாக கண்டெடுப்பு! 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை!

நெல்லையில் காணாமல் போன காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங்கின் உடல் பாதி எரிந்த நிலையில் உவரி அருகே சடலமாக மீட்கப்பட்டுள்ளது. நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் ஜெயக்குமார் தனசிங். …

நெல்லையில் காணாமல் போன காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங்கின் உடல் பாதி எரிந்த நிலையில் உவரி அருகே சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் ஜெயக்குமார் தனசிங்.  இவர் தனக்கு அடிக்கடி கொலை மிரட்டல்கள் வருவதாகவும்,  தனது வீடு மற்றும் அலுவலகத்திற்கு முன்பாக அடையாளம் தெரியாத நபர்கள் நடமாடுவதாகவும் ஏற்கனவே காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில்,  அவரை 2 நாட்களாக காணவில்லை என்று அவரது மகன் காவல்துறையில் புகார் அளித்தார்.  இதனடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் ஜெயகுமார் தனசிங் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  உடல் பாதி எரிந்த நிலையில் காணப்படுவதால் அவரை கொலை செய்தது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுதொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நெல்லை காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன்,  நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார்.

முன்னதாக தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு ஜெயகுமார் தனசிங் கடிதம் எழுதியிருந்தார்.  இந்நிலையில் இப்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.