நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே அரசு மதுபான கடையில் புகுந்து மர்ம நபர் இருவர் கொள்ளை முயற்சியில் ஈடுபடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து பள்ளிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே மண் கரடு பகுதியில் அரசின் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த கடையின் அருகில் உள்ள மதுபான பார் மற்றும் கடையின் கேட்டில் லாவகமாக புகுந்து கொள்ளையடிக்க முயன்றனர். பெரிதாக பணம் மற்றும் பொருட்கள் கிடைக்காததால் மதுபான பாரில் உள்ள மதுபாட்டில்கள் மற்றும் காலி மதுபாட்டில்களை இளைஞர்கள் எடுத்து செல்வது குறித்து சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
மேலும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் பின்னர் இந்த கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து பள்ளிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. இதனால் இரவு நேர ரோந்து பணியை போலீசார் அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.








