காமன்வெல்த் போட்டியில் நீளம் தாண்டுதல் இறுதி போட்டிக்கு இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர், முகமது அனீஸ் ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.
இங்கிலாந்தின் பர்மிங்காமில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கடந்த 28ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 72 நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். காமன்வெல்த் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடைபெறும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
காமன்வெல்த் போட்டிகளில் இதுவரை இந்தியா 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கல பதக்கங்கள் என 9 பதக்கங்களை வென்று 8வது இடத்தை பெற்றுள்ளது. 31 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம் என மாத்தம் 71 பதக்கங்களை வென்று ஆஸ்திரேலியா முதல் இடத்தில் உள்ளது.
5வது நாளான இன்று நீளம் தாண்டுதல் போட்டிக்கான தகுதி சுற்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் 8.05 மீட்டர் தாண்டினார். இதனால் அவர் காமன்வெல்த் போட்டியின் நீளம் தாண்டுதல் போட்டியில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார். இதேபோல் மற்றொரு இந்திய வீரரான முகமது அனீஸ் 7.68 மீட்டர் தாண்டி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.