தாராபுரம் அருகே பாஜக மற்றும் இந்து மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகிகள் ஒருவரையொருவர் பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கி கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பாஜக திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவராக மங்கலம் ரவியும், இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவராக ஈஸ்வரனும் பதவி வகித்து வருகின்றனர். பிரதமர் மோடியின் மனதின் குரல் நூறாவது நிகழ்ச்சி குறித்து இந்து மக்கள் கட்சி நிர்வாகி சமூக வலைதளங்களில் தவறாக பதிவிட்டதாக கூறப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது குறித்து தாராபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள உணவகத்தில் ஈஸ்வரனை நேரில் சந்தித்து மங்கலம் ரவி கேள்வி கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதில் காயமடைந்த இருவரும் தாராபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றனர்.
- பி.ஜேம்ஸ் லிசா