முக்கியச் செய்திகள் இந்தியா

குடியரசு தினம்: பாதுகாப்பு வளையத்தில் தலைநகர் டெல்லி!

நாடு முழுவதும் நாளை குடியரசு தினம் கொண்டாடப்படுவதையொட்டி டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. 

டெல்லியில் நாளை 74-வது குடியரசு தின விழா நடைபெறுகிறது. இதில் எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். ஏறத்தாழ 65 ஆயிரம் பார்வையாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நாளை குடியரசு தினம் கொண்டாடப்படுவதையொட்டி டெல்லியில் நேற்று முன்தினம் குடியரசு தின விழா முழு ஒத்திகை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தியும் இடம்பெற்றிருந்தது. நாளை நாடு முழுவதும் குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.

இதையொட்டி தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. சந்தைகள், மக்கள் கூடும் இடங்கள், பிற முக்கிய இடங்களில் வெடிகுண்டு செயலிழப்பு படையினர், மோப்ப நாய் படையினைக் கொண்டு பயங்கரவாத தடுப்பு சோதனை முடுக்கிவிடப்பட்டுள்ளது. 6,000  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் உணவகங்கள், தங்கும் விடுதிகள், நட்சத்திர விடுதிகளை போலீஸ் படையினர் சோதனை செய்து வருகிறார்கள். சந்தேகத்துக்கு இடமான நபர் என யாரையாவது கண்டால் உடனடியாக போலீசுக்கு அறிவுறுத்துமாறு ஓட்டல்கள், தங்கும் விடுதி நிர்வாகங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. சமூக ஊடகங்களிலும் பாதுகாப்பையொட்டிய விழிப்புணர்வு பிரசாரத்தை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர்.

டெல்லி எல்லைகளிலும் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் குறிப்பிட்ட தூரம் வரை ட்ரோன்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் 150 அதிநவீன  கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு நடைபெறுகிறது. அவற்றில் சிலவற்றில் முக அடையாள அமைப்பும் இணைக்கப்பட்டுள்ளதாக டெல்லி துணை போலீஸ் கமிஷனர் பிரணவ் தயாள் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் சக்தியுடன் அதிமுக மிகப்பெரிய வெற்றிபெறும்” – முதல்வர் பழனிசாமி

Jeba Arul Robinson

வாரணாசி ; ஞானவாபி மசூதி வழக்கில் இன்று தீர்ப்பு

Dinesh A

தொழில் வளர்ச்சிக்கு சிறப்பு செயல்திட்டம் வகுக்கப்படும் – மு.க. ஸ்டாலின்

Gayathri Venkatesan