முக்கியச் செய்திகள் கட்டுரைகள் பக்தி செய்திகள்

திருவண்ணாமலை ராஜகோபுரத்திற்கு 217 அடி மாலை போட்டு அழகு பார்த்தவர் மயில்சாமி!


ரேவந்த் மணி

கட்டுரையாளர்

தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற குணச்சித்திர மயில்சாமி, நடிகர் என்பதைத் தாண்டி ஆன்மிகத்தில் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர். கோயில் என்பது நமது அனைவரின் மனதுக்கு நெருக்கமான இடம், நம் உள்ளத்தின் கஷ்டங்கள் முதல் இல்லத்தின் சுபநிகழ்ச்சிகள் வரை கடவுளையும், கோயிலையும் மட்டுமே நாடுவோம் தேடுவோம். அது மூடனம்பிக்கை என சிலர் சொன்னாலும், கடவுளின் அனுகிரஹம் பெற்றவர்களால் மட்டுமே கடவுலின் சக்தியை உணர முடியும்.

பக்கத்து தெருவில் இருக்கும் கோயிலுக்கு செல்வதை தாண்டி, நம்மில் பலரும் தொலைதூர பயணம் செய்து பல்வேறு ஆன்மிக ஸ்த்தலத்துக்கு செல்வதுண்டு. அந்த வரிசையில் சிவனின் தீவிர பக்தரான மறைந்த புகழ்பெற்ற குணச்சித்திர நடிகர் மயில்சாமி அடிக்கடி செல்லும் திருகோயில் பற்றியும், அவர்தாம் செய்த தொண்டுகள் பற்றியும் இந்த தொகுப்பில் காணலாம்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இவர் அதிகம் செல்லும் கோவில் என்றால் உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயில் தான். திருவண்ணாமலையில் வருடம் தோறும் நடை பெறும் அண்ணாமலையார் திரு கார்த்திகை தீப திருவிழா தொடங்கும் முன்பதாகவே. மயில்சாமி அவர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து தனது திருப்பணிகளையும் தொண்டுகளையும் தீபம் முடியும் வரை திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் இருந்தே செய்வார்.

அதேபோல இவர் அண்ணாமலையார் ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு தண்ணீர், பிஸ்கட், போன்ற சிற்றுண்டிகளை கொடுத்து தனது திருப்பணிகளை, 10 நாட்களும் கார்த்திகை தீப திருவிழா முடியும் வரை செய்து கொண்டே இருப்பார். இவர் திரு அண்ணாமலையார் கோயிலின் 217 அடி உயரமுள்ள ராஜ கோபுரத்திற்கு 217 அடி பூமாலை அணிவித்து அதனை அழகு பார்ப்பவர்.

இவர் சென்ற வருடம் தீபத் திருவிழாவிற்கு அலங்காரம் மண்டபம், நடராஜர் மண்டபம் போன்ற அனைத்து இடங்களையும் பூக்களால் அலங்காரம் செய்து தோரணங்கள் தொங்கவிட்டு வெகு அழகாக மாற்றினார்.

அதேபோல் அண்ணாமலையார் கோவிலில் நடைபெறும் அனைத்து விழாக்களிலும் கலந்து கொண்டு அண்ணாமலையாரின் அருளை பெறுவார். அண்ணாமலையார் மீது அளவுக்கு அதிகமாக பற்று கொண்டவர் என அங்குள்ள சிவ ஆட்சியாளர்கள் கூறுகின்றனர்.

இவர் எப்போதும் எங்கேயும் தன்னை சிவ பக்தராக வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார். இவர் மட்டும் வருகை புரியாமல் பல நடிகர்களையும் அங்கு அழைத்து வருவார். இவர் அதே போல் தான் ஒரு முறை கார்த்திகை தீபத்துக்குத் திருவண்ணமலைக்கு வந்த எஸ்.பி.பாலசுப்ரணியத்தை சகல மரியாதைகளோடு ஆலயத்துக்குள் அழைத்துச் சென்று தரிசனம் பார்க்க வைத்துள்ளார் மயில்சாமி.

அண்ணாமலையார் கோவிலுக்குள் இவர் எப்பொழுதும் தன்னை ஒரு நடிகராக வெளிப்படுத்தியதே இல்லை. இவர் சிவன் மீது அளவுக்கு அதிகமான ஈடுபாடு இருப்பதால் தான் சிவராத்திரி சிவ தரிசனம் பார்த்த பின்பு இயற்கை எய்தினார்.

அண்ணாமலையாருக்கு செய்த தொண்டு எண்ணற்றவை. அதனால் தான் இவருக்கு அண்ணாமலையார் ஆலயத்தில் சிவராத்திரி அன்று சிவன் மீது சாற்றப்பட்ட வெற்றிவேர் மாலை சமர்ப்பித்து அவர் ஆத்மா சாந்தியடைய திருவாசகம் பாடி நடிகர் மயில்சாமி உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

  • ரேவந்த் மணி, நியூஸ் 7 தமிழ்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பொன்னியின் செல்வன் 2 : இசை & ட்ரெய்லரை வெளியிடும் உலகநாயகன்!!

Web Editor

போக்குவரத்துக் கழகத்தை தனியாருக்குத் தாரை வார்ப்பதுதான் திராவிட மாடலா? – சீமான்

Web Editor

தருமபுரி மாவட்டம் பொன்னேரி அருகே கார் விபத்து; தந்தை மற்றும் மகள் உயிரிழப்பு

Halley Karthik