லியோ படத்தில் இணைந்த லெஜண்ட் சரவணன்? – வெளியான புதிய அப்டேட்!

லெஜண்ட் சரவணன் லியோ படத்தில்  இணைந்துள்ளதாக ரசிகர்கள் பலரும் இணையத்தில் பதிவிட்டு தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் லியோவும் ஒன்று. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய்…

லெஜண்ட் சரவணன் லியோ படத்தில்  இணைந்துள்ளதாக ரசிகர்கள் பலரும் இணையத்தில் பதிவிட்டு தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் லியோவும் ஒன்று. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்துள்ளார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லியோவின் ப்ரோமோ வெளியாகி சமூக ஊடகங்களில் புயலாக சுழன்று கொண்டிருக்கிறது.

லியோ படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்க கமிட் ஆகியுள்ளார் த்ரிஷா. ஏற்கனவே குருவி, கில்லி, ஆதி, திருப்பாச்சி போன்ற படங்களில் விஜய்யுடன் நடித்த த்ரிஷா தற்போது 5-வது முறையாக விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார். 14 வருடங்களுக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தில் நடிகர் விஜய்யின் மனைவியாக த்ரிஷா நடிப்பதாகக் கூறப்படுகிறது.

https://twitter.com/yoursthelegend/status/1627888216253804544?s=20

இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், லெஜண்ட் சரவணன் காஷ்மீரில் இருக்கும் வீடியோ ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  லெஜண்ட் சரவணன்  காஷ்மீர் சென்றுள்ளதால் அவர் லியோ படத்தில்  இணைந்துள்ளதாக ரசிகர்கள் பலரும் இணையத்தில் பதிவிட்டு தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதுகுறித்து படக்குழு தரப்பிலிருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவளும் வெளியாகவில்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.