வாட்ஸ்ஆப்பில் டிஜிலாக்கர் சேவை

டிஜிலாக்கர் சேவையின் வழியாகக் கல்விச் சான்றிதழ், ஆதாா் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்களைச் சேமித்து வைத்துக்கொள்ள முடியும். இந்நிலையில், இந்த சேவையை வாட்ஸ்ஆப்பில் பெற முடியும் என மெட்டா அதிகாரபூர்வமாக…

டிஜிலாக்கர் சேவையின் வழியாகக் கல்விச் சான்றிதழ், ஆதாா் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்களைச் சேமித்து வைத்துக்கொள்ள முடியும். இந்நிலையில், இந்த சேவையை வாட்ஸ்ஆப்பில் பெற முடியும் என மெட்டா அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மெட்டா வெளியிட்ட செய்தியில், சீரான நிர்வாகத்தை உறுதிசெய்து, மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கும் நோக்கில் அரசின் சேவைகள் இணைய வழியில் வழங்கப்பட்டு வருவதாகவும், அதன் கீழ் பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ், காப்பீட்டுச் சான்றிதழ், சிபிஎஸ்இ பொதுத்தோ்வு மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்டவற்றை டிஜிட்டல் வடிவில் செயலியில் சேகரித்து வைத்துக்கொள்ள முடிவதாகவும் உள்ளது. இந்நிலையில், டிஜிலாக்கர் சேவைகள் இப்போது வாட்ஸ்அப் மூலம் வழங்குவதில் பெருமிதம் கொள்வதாகத் தெரிவித்துள்ளது.

அண்மைச் செய்தி: ‘‘ஆட்சி தான் மாறியுள்ளது, காட்சி மாறவில்லை’ – பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு’

மேலும், டிஜிலாக்கர் சேவைகளை வாட்ஸ்ஆப் வாயிலாகப் பெற 9013151515 என்ற எண்ணுக்கு ‘ஹாய்’ என்று மெசேஜ் அனுப்ப வேண்டும் எனவும், இதன் மூலமாக அரசின் சேவைகளை மக்கள் எளிதில் பெற முடியும் எனக் குறிப்பிட்டுள்ள மெட்டா அதற்கான 5 படிநிலைகளைத் தெரிவித்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதன்படி,

  1. 9013151515என்ற எண்ணை தங்களில்போனில் சேமிக்க வேண்டும்.
  2. சேமிக்கப்பட்ட எண்ணிற்கு ‘DigiLocker’என செய்தி அனுப்ப வேண்டும்.
  3. ‘DigiLocker’உறுதிசெய்யக்கேட்கும் தகவல்களைப் பதிவிட வேண்டும்.
  4. ‘DigiLocker’அனுப்பும்ஒடிபி எண்ணைப் பதிவிட வேண்டும்.
  5. திரையில் இருக்கும்,கல்விச் சான்றிதழ், ஆதாா் அட்டை, டிரைவிங் லைசன்ஸ் உள்ளிட்ட ஆவணங்களில் தேவையானதைத் தேர்வு செய்து பெற்றுக்கொள்ளலாம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.